தஞ்சாவூர், ஜன.13 - தைத் திருநாளையொட்டி, திங்களன்று டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளில் சமத்துவ மற்றும் பசுமை பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பசுமை பொங்கல் விழா நடைபெற்றது. மேலும், செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செல்லப்பன் பேட்டை, புதுக்குடி, ராயமுண்டான்பட்டி ஆகிய கிரா மங்களிலும் பெரியார் மணியம்மை பல்க லைக்கழகம் சார்பில், பொதுமக்கள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு கிரா மத்திலும் சிறந்த விவசாயி ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை முதன்மை பொறியாளர் வேதா மாதவன் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழா வில் பங்கேற்றார். நிகழ்வுகளில், பல்கலைக் கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா, அனைத்து துறை சார்ந்த முதன்மையர்கள், இயக்கு நர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பசுமைப் பொங்கல் விழாவை கொண்டாடி னர்.
ஜே.ஸி.குமரப்பா பள்ளி
பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடை பெற்றது. இதையொட்டி, பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ கல்விப்புல இயக்குநர் அஸ்வின் கணபதியை பேண்டு வாத்தியங்கள் முழங்க ரேக்ளா வண்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப் பொருளாளரும், குமரப்பா பள்ளித் தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர்பிச்சை, அறங்காவலர்கள், குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிசாபேகம், முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமுஎகச தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், ஒரத்தநாடு கிளை சார்பில், சமத்துவப் பொங்கல் திருவிழா நடை பெற்றது. தம்பி அய்யா தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் அ.நாக ராஜன் சிறப்புரையாற்றினார்.
பாபநாசம்
அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதை யொட்டி உறியடி, பலூன் உடைத்தல், பம்பரம் விடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. இதில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் பாலாஜி, உதவி ஆளுநர் அறிவழகன், முன்னாள் உதவி ஆளுநர் காதர் பாட்ஷா, அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் தலைவர் ரவிச்சந்திரன், சாச னத் தலைவர் கோதண்டராமன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காருகுடி மயிலாடுதுறை மாவட்டம், விளாகம் ஊராட்சி, காருகுடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் இரா.ஜீவா தலைமை யில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடினர். தொடர்ந்து மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா திங்களன்று நடை பெற்றது. விழாவிற்கு கல்லூரி துணைத் தலை வர் டாக்டர் மாலதி கண்ணன் தலைமை வகித்தார். ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி துணை தலைவர் மரு.மாலதி கண்ணன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேற்கண்ட விழாக்களில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு, அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
கீழையூர்
வாலிபர் சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிநாகப்பட்டினம், ஜன.13- நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூண்டி கிளை சார்பில் மாரத்தான் போட்டியானது வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் பாலத்தில் தொடங்கி, திருப்பூண்டி வரை 8 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாலியல் வன்முறைக்கு எதிராகவும், மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பல்கலைக்கழகங்களில் யுஜிசி முறையில், துணைவேந்தர்கள் நடவடிக்கையில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்தும் நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தொடங்கி வைத்தார். திமுக கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.பா.ஞானசேகரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், மாவட்டத் தலைவர் பி.எம். நன்மாறன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முகேஷ் கண்ணன், மாவட்டத் தலைவர் மு.ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.