மதுரை, ஜன. 13 - பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டிருந்த கேந்திரிய வித்யாலயா தேர்வுகள் ரத்து செய்யப் பட்டு உள்ளன. ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர் களுக்கு தேர்வுகள் அறிவிக்கப் பட்டு இருந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் இந்த தேர்வு கள் வருவது மாணவர்களுக்கும் - பெற்றோர்களுக்கும் திருநாள் கொண்டாட முடியாத சூழலை யும், அலைக்கழிப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற மக்க ளவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் உடனடியாக கேள்வி எழுப்பினார். தமிழ கத்தில் பொங்கல் விடுமுறைக் காலத்தில் தேர்வுகள் நடத்து வதைத் தவிர்க்குமாறு கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் டி. மணிவண்ணனுக்கு 10.01.2025 அன்று கடிதம் எழுதியும் வலியுறுத்தினார். இதற்கு கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் சு. வெங்கடேசன் எம்.பி.க்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “சு. வெங்கடேசன் எம்.பி. ஜனவரி 10 தேதியிட்ட கடிதத்தில் (F 170346/PT/2024 - 25/ KVS (CHER)/12142 - 13.01.2025) வெளிப்படுத்தி இருந்த உணர்வு களையும், கருத்துக்களையும் கணக்கில் கொண்டு ஜனவரி 13 முதல் 16 வரையிலான காலத்தில் தேர்வுகளை தவிர்க்குமாறு தமிழ் நாட்டில் உள்ள கேந்திரிய வித்யா லயா மற்றும் அவற்றின் முதல் வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்வுகளைத் தவிர்க்குமாறு உத்தரவிட்ட கேந்தி ரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் டி. மணிவண்ண னுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.