பதவிக் காலம் முடிந்தபிறகும் ஆளுநர் பொறுப்பில் ஒன்றிய அரசு ஆசியோடு தொடர்ந்து கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி தொடர்ந்து வம்படி வழக்கில் ஈடுபட்டு வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த முயல்கிறார். ஆளு நர் மாளிகையையே ஆர்எஸ்எஸ் அலுவலக மாக மாற்றும் வகையில் அத்துமீறி வருகிறார்.
கடந்தாண்டு ஆளுநர் உரையின் போது, சில பகுதிகளை படிக்க மறுத்தார். இந்தாண்டு உரை யையே படிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டார். ஒரு நாடகத்தை திட்டமிட்டு நடத்தும் நோக்கோடு தான் அவர் அவைக்கே வந்திருக்கிறார். இதற்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷ னை துணைக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் அவையில் தாம் நடந்து கொண்ட தை நியாயப்படுத்த முடியாத ஆளுநர் மாநில அரசு, சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக காட்டவில்லை என்றும், இது அவசர நிலைக் கால தணிக்கையை நினைவுபடுத்துகிறது என்றும் பழி சுமத்தினார். ஆளுநரின் திட்டம் பலிக்க வில்லை என்று சபாநாயகர் கூறியுள்ளது கவ னத்தில் கொள்ளத்தக்கது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேச பக்தியை ஊரறியும், உலகறியும். அவர்கள் நமது நாட்டில் தேசியக் கொடியையோ, தேசிய கீதத்தையோ ஏற்க மறுத்தவர்கள்தான். அவர்கள் வழி வந்தவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு சட்டப் பேரவை யில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடி வில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். ஆனால் அதற்குள் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக குய்யோ முறையோ என அறிக்கை விட்டார்.
தமிழ்நாட்டு மக்களையும் நூற்றாண்டு கண்ட சட்டப் பேரவையையும் அவமதிப்பது ஆளுநரு க்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அரசியல் சட்டத்தின் அடிப்படை கடமைகளைக்கூட ஆளு நர் நிறைவேற்ற மறுக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க் கட்சித் தலைவரைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாரதமே உயர்ந்த தாய் என்றும், அவளது குழந்தைகளுக்கு அரசியல மைப்பே உயர்ந்த நம்பிக்கை என்றும் அவர் வாயாடியிருக்கிறார். முதல்வர் சுட்டிக்காட்டு வதும் இதைத்தான். அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். மாநில அர சினால் தயாரித்துத் தரப்படும் ஆளுநர் உரையை அவையில் வாசிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதைச் செய்ய மறுக்கும் ஆளுநர் ஒவ் வொரு நாளும் போட்டி அறிக்கைகளை வெளி யிட்டு வம்பு வளர்த்து வருகிறார்.
பல்கலைக்கழகங்களை முற்றாக ஆளு நர்களின் விளையாட்டு மைதானமாக மாற்றிவிட ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டுகிறது. ஆர்.என். ரவி போன்றவர்களிடம் உயர்கல்வி நிறுவனங் கள் சிக்கி சின்னாபின்னமாவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.