headlines

img

யாருக்கான தேசம்?

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப் ப்பேற்றுள்ள நரேந்திர மோடி நாடாளுமன்ற கூட்டங்களுக்கு முறையாக வருவதில்லை. ஊட கங்களை சந்திப்பதும் இல்லை. மாறாக “மனதின் குரல்” என்ற பெயரில் யாரும் எதிர்க்கேள்வி கேட்க  வாய்ப்பில்லாத வகையில் வானொலியில் உரை யாற்றுவார். 

ஊடகச் சந்திப்புகளை அபூர்வமாக நடத்தினா லும் கூட அது திட்டமிடப்பட்ட, முன்பே தயாரிக் கப்பட்ட ஒரு நாடகமாகவே இருக்கும். அந்த வகை யில் ஜெரோதா பங்கு வர்த்தக நிறுவன இணை  நிறுவனர் நிகிலுடன் பிரதமர் ஒரு கலந்துரை யாடலை நிகழ்த்தியுள்ளார்.

அதில் எல்லோரையும் போலவே நானும் சாதா ரண மனிதன்தான், கடவுள் அல்ல என்று தன்ன டக்கமாக கூறியுள்ளார். ஆனால் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் ஒரு சராசரி மனிதனல்ல என்றும், கடவுளின் அவதாரம் என்றும் கூறியதை மறந்துவிட முடியாது. நானும் தவறுகள் செய்வேன், ஆனால் கெட்ட எண் ணத்துடன் எந்தவொரு செயலிலும் ஈடுபட்ட தில்லை என்றும் மோடி கூறியுள்ளார். அவர் இது வரை எந்தவொரு நல்ல விசயமும் செய்ததாக தெரியவில்லை. நல்ல எண்ணமும் அவருக்கு இருந்தது இல்லை.

அவருடைய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்று ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதாக இருக்கும். அல்லது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கர சேவை செய்வதாக இருக்கும். பல நடவடிக்கை கள் இந்த இரு தரப்பின் நலனைக் கருத்தில் கொண்டதாக இருக்கும்.

இந்த நாட்டின் கோடானுகோடி மக்களின் நலனை முன்னிறுத்தி அவர் எந்தச் செயலிலும்  ஈடுபட்டதில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, வேளாண் திருத்தச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்கள் வெட்டிச் சுருக்குவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியாரின் வேட்டைக் காடாக மாற்றுவது, நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை வெட்டிச் சுருக்குவது, கச்சா எண்ணெய் விலை குறைந்தா லும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க மறுப்பது என கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு சேவை செய்கிறது மோடி அரசு. 

மறுபுறத்தில் நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விசிறி விடுவது, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு வாரிய திருத்தச் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநி லத்தை துண்டு துண்டாக உடைப்பது, ஒரே நாடு, ஒரே தேர்தல் என இந்துத்துவா கூட்டத்தின் செயல்திட்டத்தையே தன்னுடைய அரசின் செயல்திட்டமாக மாற்றிக்  கொண்டுள்ளது மோடி அரசு. இந்த லட்சணத்தில் தேசமே என்னு டைய முதல் முன்னுரிமை என்று வாய்ப்பந்தல் போட்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் அவர் சொல்லும் தேசம் எல்லோருக்குமானதல்ல. குறிப்பிட்ட சிலரையே அவர் தேசமாக பார்க்கி றார். அதனால் அவருடைய செயல்கள் அனைத் தும் நாசகரமாக உள்ளன என்பதுதான் உண்மை.