திருப்பூர், டிச.26 - சிறுவாணி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு 10 இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலைக்கல்லூரி இணைந்து இளைஞர் இலக்கியத் திருவி ழாவை வரும் ஜனவரி 8, 9 தேதிகளில் நடத்துகின்றன. அதில் மாணவர்கள் 2 நிமிட பேச்சுப் போட்டி, விவாத மேடை, இலக்கிய வினாடி வினா, நூல் அறிமுகம் (தமிழ், ஆங்கிலம்), ஓவியப் போட்டி, ஹைக் கூ கவிதைகள், தொன் மையும் தொடர்ச்சியும் உள்ளிட்ட 10 போட்டிகள் நடத்தப்படு கின்றன. இதில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன் றாம் பரிசு ரூ.3000 வழங்கப்படுவதுடன், கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்ப டுகிறது. இப்போட்டிக்கான விரைவுக் குறியீடு (க்யூ.ஆர். கோடு) உடைய சுவர் ஒட்டியை திருப்பூர் மாவட்ட நூலக அலு வலர் பெ.கார்த்திகேயன் பரிந்துரையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ண னிடம் வழங்கப்பட்டது. இவ்விழாவை நடத்தும் பொறுப்பா ளர்கள் பொது நூலகத்துறை நூலகர் அ.முருகன், மூன்றாம் நிலை நூலகர் ஆ.கு.கலைச்செல்வன் ஆகியோர் வழங்கி னர்.