districts

img

வெண்மணி நினைவு தினப் பேரவைகள்: தாராபுரத்தில் அகில இந்திய மாநாட்டிற்கு நிதியளிப்பு

திருப்பூர், டிச.26 - வெண்மணி தியாகிகள் நினைவு  தின சிறப்புப் பேரவைகள் நடைபெற் றன. தாராபுரத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மூத்த தோழர்கள் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டனர். அகில இந்திய மாநாட்டு நிதி வழங்கப்பட்டது. தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா அலுவல கத்தில் நடைபெற்ற வெண்மணி நினைவு தினப் பேரவைக்கு  கட்சியின்  தாலுகா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் தலைமை ஏற் றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி வெண்மணி தியாகிகள் குறித்து உரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பவித்ராதேவி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனக ராஜ் ஆகியோர் பேசினர். இந்தப் பேரவையில், மதுரையில்  ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  24ஆவது அகில இந்திய மாநாட் டிற்கு, கட்சியின் தாராபுரம் போக்கு வரத்துக் கிளை ரூ.12ஆயிரம், மூல னூர் கிளை ரூ.10 ஆயிரம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ரூ.3600 நிதி வழங்கப்பட்டது.  இந்த பேரவையில் கட்சியின் தாராபுரம் தாலுகாவில் மூத்த தோழர் கள் என்.காளியப்பன், எஸ்.பொன் னான், எஸ்.கிட்டு, கே.முத்துச்சாமி, கோவிந்தராஜ் ஆகியோர் துண்டு அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர். கட்சி உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். உடுமலை: உடுமலை ஒன்றியம் பள்ளபா ளையத்தில் புதனன்று அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கம் சார் பில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க உடுமலை ஒன்றி யக்குழு உறுப்பினர் பி.எஸ்.சுந்தரம்  தலைமையில் நடைபெற்ற இக்க ருத்தரங்கத்தில், கிராமப்புற வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலையும், சட்டக்கூலி ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க  வேண்டும். விவசாயத் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையில் விலைவாசிக்கேற்ப கூலியை உயர்த்த வேண்டும். விவசாயத் தொழிலாளர் நல வாரி யத்தை முறையாக செயல்படுத்த  வேண்டும். விவசாயத் தொழிலாளர்க ளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இதில், இமான்(எ)செல்வராஜ் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆர்.குமார், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் வெண்மணி தியாகிகள் குறித்துப் பேசினர். சிஐடியு மாவட் டத் துணைச்செயலாளர் எஸ்.ஜெக தீசன், வி.தொ.ச உடுமலை ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எ.வனிதா, பழ னிச்சாமி, எஸ்.வஞ்சிமுத்து உள் ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். முடிவில், குமரகுரு நன்றி  கூறினார். வேலம்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அனுப்பர்பாளையம் அலுவல கத்தில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள் பேரவை புதனன்று நடைபெற்றது. இப்பேரவைக்கு வேலம்பாளையம் நகரக்குழு உறுப் பினர் பி.சின்னச்சாமி தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி. ஆர்.கணேசன் வெண்மணியின் வர லாறு குறித்துப் பேசினார். நகரச் செய லாளர் ச.நந்தகோபால், நகரக்குழு முடிவுகளை விளக்கினார். இதில் நக ரக் குழு உறுப்பினர்கள். த.நாகரா ஜன், ஆர்.சுகுமார், ப.செல்வி, ஆ. கிருஷ்ணவேணி, என்.விஸ்வநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.