tamilnadu

img

சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கான இழப்பீட்டை உடனே வழங்கிடுக! - விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் டிசம்பர் 24 அன்று திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் மாநிலத் துணைத் தலைவர் கே.முகமது அலி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளா ளர் கே.பி.பெருமாள், மாநில துணைத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளின் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 23  அன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுங்கச் சாவடியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகள், விவசாய சங்க தலைவர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதோடு, போராட்டத்தில் பங்கேற்ற 135 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயி கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து இழப்பீட்டு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.  மரவள்ளி விவசாயிகளை பட்டினிச் சாவில் இருந்து காத்திடுக! மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு  ரூ.5 ஆயிரத்திற் கும் கீழ் கிடுகிடுவென விலை வீழ்ச்சியடைந்துவிட்டது.  இது இன்னும் குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது. மரவள்ளிக் கிழங்கு ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும்  மேல் விவசாயிகளுக்கு செல வாகிறது. தமிழக அரசு தலையிட்டு ஜவ்வரிசி முழு வதும் சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வருட மும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திa விலை நிர்ண யம் செய்திட வேண்டும்.  பயிர் பாதிப்புகளுக்கு உரிய   நிவாரணம் வழங்கிடுக!  பெஞ்சால் புயலால் திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு திரு வண்ணாமலை மாவட்டத்தை பெஞ்சால் புயல் பாதித்த மாவட்டமாக அறிவித்து புயல் நிவாரணத்தை அனைத்து குடும்பத்திற்கும் வழங்கிட வேண்டும்.  மேலும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.