உதகை, டிச.25- உதகையில் வருகிற 27 ஆம் தேதி யன்று 3 நாட்கள் குறும்பட விழா நடை பெற உள்ளது. நீலகிரி மாவட்ட வியாபாரிகள் சங்க பேரமைப்பு சார்பில் ஊட்டியில் குறும் பட விழா நடக்கிறது. இதற்கான ஆலோ சனை கூட்டம் புதனன்று உதகையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் மற்றும் குறும்பட விழா ஒருங்கிணைப்பாளர் முகமது பாரூக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறு கையில், நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத் தலைநகரமாக உள்ளது. இங்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலேயே அதிகள வில் வருகின்றனர். மற்ற சமயங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதால், வியாபாரிகள் பாதிக் கப்படுகின்றனர். எனவே, இடைப்பட்ட சமயங்களிலும் சுற்று லாப் பயணிகளை கவ ரும் வகையில் தற் போது நீலகிரி மாவட் டத்தில் குறும்பட விழா நடத்த திட்டமிட்டு உள் ளோம். கடந்த 8 ஆண்டுக ளாக இந்த குறும்பட விழா உதகையில் நடந்து வந்த போதிலும், இந்த ஆண்டு சிறப்பாக நடத்தவும், வெளி நாடு மற் றும் வெளி மாநில சுற்றுலாப் பயணி களை கவரும் வகையில், நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதில், 23 நடுவர்கள் பங்கேற்று சிறந்த குறும் படங்களை தேர்வு செய்ய உள்ளனர். 50 நாடுகளை சேர்ந்த 550 குறும் படங்கள் இவ்விழாவில் இடம் பெற உள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படங்கள் ஜெர்மனியில் நடக்கும் குறும்பட விழாவில் திரையிடப்படும். மேலும், இந்த ஆண்டு நீலகிரி மாவட் டத்தில் நடத்தப்படும் குறும்பட விழா வில் தேர்வு செய்யப்படும் 7 சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படும். இந்த குறும்படத்தை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படமாட் டாது. உதகையில் அசெம்பளி திரைய ரங்கில் இந்த திரைப்பட விழா நடக்கி றது. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலை வர் விக்கிரமராஜா மற்றும் இயக்கு நர்கள் கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்க உள்ளனர், என்றார்.