districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழா மைதானம் தயாராகிறது

திருப்பூர், டிச. 25 - தமிழ்நாடு அரசு, திருப் பூர் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து, திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் 21 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவுக்கு வேலன் ஹோட் டல் மைதானம் சுத்தப்படுத் தும் தயாரிப்புப் பணி நடை பெற்று வருகிறது. திருப்பூர் புத்தகத் திரு விழா ஜனவரி 23ஆம் தேதி  முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை 11 நாட்கள்  காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல்  மைதானத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திரு விழாவுக்கு ஏறத்தாழ ஒரு மாத காலம் இருக் கும் நிலையில், தற்போது வேலன் ஹோட்டல்  மைதானத்தை சீர்படுத்தும் பணி தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில்  இருந்த புதர்கள், செடி, கொடிகள் அகற்றப் பட்டு மைதானம் சமப்படுத்தும் பணி நடை பெறுகிறது. புத்தகத் திருவிழா நடைபெறும்  கண்காட்சி அரங்கம், கலை நிகழ்ச்சிகளுக் கான மேடை உள்ளிட்ட பகுதிகள் வரை படம் தயாரித்து அவற்றை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு வின் நிர்வாகிகள் ஆர். ஈஸ்வரன், அ.நிசார் அக மது, எஸ்.சுந்தரம் மற்றும் பொறியாளர் சௌ. ஸ்டாலின்பாரதி உள்ளிட்டோர் இங்கு நடை பெற்று வரும் பணிகளை மேற்பார்வையிட் டனர்.