திருப்பூர், டிச. 25 – கீழ்த்தஞ்சை பகுதியில் செங் கொடி இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட வெண்மணி தியாகி கள் நினைவு தினம் திருப்பூர் மாவட் டத்தில் எழுச்சியுடன் கடைப்பிடிக் கப்பட்டது. தமிழகத்தில், கீழ்த்தஞ்சை பகு தியில் செங்கொடி இயக்கத்தின் தலைமையில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உரிமைப் போராட்டம் நடத்தியபோது, நிலவு டைமை ஆதிக்க சக்திகளால் உயி ரோடு கோரமாக தீயிட்டுக் கொளுத் தப்பட்ட கீழ்வெண்மணி 44 தியாகிக ளின் நினைவு தினம் வர்க்கப் போராட்டக் கனலை நெஞ்சில் சுமக் கும் விதத்தில் ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு விழுப்பு ரத்தில் ஜனவரி 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறுவதை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தில் 24 செங்கொடிகளுடன் அலங்கார வளைவு வைத்து, செங் கொடி ஏற்றி பிரச்சாரம் செய்வது என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய் திருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளி லும் எழுச்சியுடன் இந்நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு அலு வலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக 24 செங்கொடி களுடன் அலங்கார வளைவு அமைக் கப்பட்டு இருந்தது. “சுரண்டல், ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்து வத் தமிழ்நாடு மலரட்டும்!” என்ற முழக்கத்துடன் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு அருகில் வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல், திருப்பூர் தெற்கு மாநகர் தென்னம்பாளையம் கிளை அலுவலகம் முன்பாக, வெண்மணி நினைவு தின நிகழ்ச்சி நடைபெற் றது. கட்சியின் மாநகரக் குழு உறுப் பினர் கே.பொம்முதுரை தலைமை ஏற்றார். கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துகண்ணன் கொடி யேற்றி வைத்து வெண்மணி தியா கங்களை நினைவு கூர்ந்தார். மூத்த தோழர் எஸ்.சுந்தரம் வெண்மணி தியாகிகள் தின உரையாற்றினார். தெற்கு மாநகரச் செயலாளர் த. ஜெயபால், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர்கள் நா.சஞ்சீவ், த. ஆறுக்குட்டி, எஸ்.சந்திரசேகர், பா. ஞானசேகர், ஜி.செந்தில்குமார் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். காட்டுவளவு கிளைச் செயலாளர் தி.அ.சம்பத் நன்றி கூறினார்.
ஊத்துக்குளி
வெண்மணி தியாகிகளின் 56 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில், புதுப்பாளை யம், சாலப்பாளையம், அம்பேத் கர் நகர், மோளக்கவுண்டம்பாளை யம், கரைப்பாளையம், நடுப்பட்டி, ஒத்தப்பனை மேடு, வட்டாலப்பதி ஆகிய இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இதில் விவசாயத் தொழிலாளர் சங்கத் தாலுகா தலைவர் ஆர்.மணியன், தாலுகா செயலாளர் க. பிராகஷ், விவசாய சங்க ஊத்துக் குளி தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, சிஐடியு நிர்வாகி காமராஜ், ஏ.கே.மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெண்மணி தின கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு ஒன்றியச் செயலாளர் மாசா ணம் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் கொடியேற்றினார். விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.எம்.வீரப்பன், வி. தொ.சங்கத்தின் ஒன்றிய பொரு ளாளர் எம்.காந்தி, வி.ஏ.ஈஸ்வரன், எஸ்.வெள்ளியங்கிரி, பாலசுப்ர மணி, பொன் ஆண்டவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். காங்கேயம்: அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியூ காங்கயம் கிளை சார்பில் காங்கேயம் கிளை முன்பு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்விற்கு, விஸ்வநாதன் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வா கிகள் நடராஜன், அர்ச்சுனன், ராஜ சேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். அவிநாசி: வெண்மணி தியாகிகளை நினைவு கூரும் வகையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செல்வபுரம் பகுதி யில் கொடி ஏற்றப்பட்டது. அதேபோல ஆட்டையாம்பா ளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வுகளில் அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் ஒன்றியத் தலைவர் முருகேஷ், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகி ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.