districts

img

குட்டியானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் தீவிரம்

கோவை, டிச.25- தாயை இழந்த ஒரு மாத குட்டி யானையை, இதர யானைக்கூட்டங்கள் சேர்க்காத நிலையில், வேறு யானைக் கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி யுள்ள தடாகம் மற்றும் வரப்பாளையம்  பகுதியில், 14க்கும் மேற்பட்ட யானை கள் வனப்பகுதியில் இருந்து வெளி யேறி அருகில் உள்ள விவசாய தோட் டங்களில் புகுந்தது. இந்த யானை கூட் டத்தை வனப்பகுதிக்குள் வனத்துறை விரட்டி விட்டனர். இதில், பிறந்து 1  மாதங்களே ஆன குட்டி ஒன்று தனியாக  சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது.  இதை யடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, பெண் யானை  ஒன்று உயிரிழந்ததும், அதன் அருகி லேயே குட்டி யானை சுற்றிச்சுற்றி வந்த தும் தெரியவந்தது. இதனையடுத்து, குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க் கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகா ரிகள் கூறும்போது, “சுமார் 30 முதல் 32 வயதுமிக்க பெண் யானையின் உள்  உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டு கீழே  விழுந்துள்ளது. மீண்டும் எழ முயற்சித்து  முடியாமல், உள் உறுப்புகள் பாதிக்கப் பட்டு உயிரிழந்துள்ளது. பெண் யானை யின் மடியில் பால் வடிகிறது. அதனால்,  குட்டி யானையின் தாய் என்பது தெரிய வந்துள்ளது” என்றனர். இதனிடையே  பொன்னூத்தும்மன் கோயில் அருகில் உள்ள வனப்பகுதி யில் 10 யானைகள் கொண்ட கூட்டத்து டன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த பெண் யானைகள் இந்த குட்டியை இரவு வரை சேர்த்துக்கொள்ளாததால், அந்த குட்டி யானையை வனத்துறையினர் ஜீப்பில் ஏற்றி வனப்பகுதி அருகிலுள்ள  தோட்டத்திற்கு கொண்டு சென்றனர்.  குட்டியை புதனன்று காலை அருகி லுள்ள மற்ற இரண்டு யானை கூட்டத் துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட  வுள்ளதாகவும் மாலைக்குள் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த னர்.