கண் கண்ணாடி கடை எரிந்து நாசம்
கண் கண்ணாடி கடை எரிந்து நாசம் நாமக்கல், டிச. 25- பரமத்தி வேலூரில் கண் கண்ணாடி (ஆப்டிக்கல்ஸ்) கடை யில் ஏற்பட்ட தீவிபத்தில், கடை முழுவதும் எரிந்து, ரூ.10 லட் சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலையில் மகா ஆப்டிக்கல்ஸ் என்கிற கண் கண்ணாடி கடை உள்ளது. இந்நிலையில் புதனன்று கடையின் உரிமையாளர் நாகரத்தினம் வீட்டிற்கு உணவருந்த சென்றுள்ளார். அப் போது இவரது கடையில் இருந்து கரும்புகை வருவதாக அருகே உள்ளவர்கள் நாகரத்தினத்திற்கு தெரிவித்துள்ள னர். இதனையடுத்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது கடையினுள் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, வேலாயுதபாளையம், நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வாக னத்தில் வந்த வீரர்கள் கடையை திறந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை கொண்டு பீச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால் கடையில் இருந்த கண் பரிசோதனை கருவி இயந்திரம், கண் கண்ணாடிகள் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர், போலீசார் நடத்திய சோதனையில் மின்கசிவு காரணமாக கண் கண்ணாடி கடை எரிந்ததாக தெரி வித்தனர், இருப்பினும் பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு பதுக்கல் – கைது
பட்டாசு பதுக்கல் – கைது தருமபுரி, டிச. 25- அனுமதியின்றி எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்து வந்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார். தருமபுரி, மகேந்திர மங்கலம் காவல் நிலையத்துக்குட் பட்ட பகுதியில், எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசுகளை மளிகை கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வந்த தகவலையடுத்து, உதவி காவல் ஆய்வாளர் மாதேஸ்வ ரன், தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற் கொண்டனர். இதில், ஜிட்டாண்ட அள்ளி அடுத்த கிட்டம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (39), மளிகை கடையில் சோதனை செய்த போது எளிதில் தீ பற்றி அதிக சத்தத்துடன் வெடிக்க கூடிய பட்டாசு மற்றும் சரவெடிகள் இருப்பதைக் கண்டனர். இவற்றை போலீசார் பறிமுதல் செய்து, உதயகு மாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி உரிமையாளர் கடத்தல் - 5 பேர் கைது
பள்ளி உரிமையாளர் கடத்தல் - 5 பேர் கைது தருமபுரி,டிச.25- தருமபுரியில் பள்ளி உரிமையாளரை காரில் கடத்திய சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விரைந்து செயல்பட்டு பள்ளி உரிமையாளரை மீட்டு, தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபு ரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்முனி (68), இவர் சொந்தமாக பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இந் நிலையில், செவ்வாயன்று பாப்பிரெட்டிபட்டியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு தனது நண்பர்களுடன் செம்முனி சென்றுள்ளார். அங்கிருந்த போது திடீரென வெள்ளை நிறக் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் செம்முனியை தாக்கி, காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, செம்முனியின் நண்பர் பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித் ததில், பாப்பிரெட்டிப்பட்டி பேராரிபுதூர் அரசு ஊராட்சி நடு நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் இனிய வன் (41), தீர்த்தகிரி (45), அம்பேத்குமார் (41), மனோஜ் குமார் (29), சுரேஷ் (29) ஆகிய 5 பேர் என தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசார் கடத்தல் கும் பலை சுற்றி வளைத்து செம்முனியை மீட்டனர். பின்னர் ஐந்து பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், செம்முனி, தான் நடத்தி வரும் பள்ளியின் மீது ஆசைத்தம்பி என்பவரின் மனைவி அமிர் தவள்ளி (60), என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டும் தராததால், பள்ளியை கிரைய பத்திரம் செய்து கொடுக்க கேட்டுள்ள னர். இதை செம்முனி மறுத்து வந்ததால் அவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்தியது தெரியவந்தது.
பேருந்து - டிப்பர் லாரி மோதி விபத்து 20 பேர் காயம்
பேருந்து - டிப்பர் லாரி மோதி விபத்து 20 பேர் காயம் கோவை, டிச.25- பொள்ளாச்சி சாலை, மயிலேரிபாளையம் அருகே கட்டுப் பாட்டை இழந்த தனியார் பேருந்து, வலது புறமாக திருப்ப முயன்ற டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளுடன் சென்ற பி.வி.டி என்ற தனியார் பேருந்து பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது பேருந்து ஒத்தக்கால்மண்டபம் அடுத்த மயிலேரிபாளையம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று வலது பக்கம் திரும்ப முயன்றது. இதனை எதிர்பார்க்காத ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றார். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிப்பர் லாரி மீது மோதியது. இதில் பேருந்து பயணித்த 7 பெண்கள் உட்பட 20 பேர் காயம டைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டி கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செட்டி பாளையம் போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து - லாரி விபத்தால் கோவை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மீனவர் சங்கம் துவக்க விழா
மீனவர் சங்கம் துவக்க விழா நாமக்கல், டிச. 25- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு நக ராட்சி திருமண மண்டபத்தில் புதனன்று அன்னை காவேரி மீனவ நலச்சங்க துவக்கவிழா நடைபெற்றது. மீனவர் நலச்சங்க துவக்க விழாவில், பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர் மன்றத் துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு சங்க கொடியேற்றி, சங்க பலகையை திறந்து வைத்தனர். இந்நிகழ் வில் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், சங்ககௌ ரவ ஒருங்கிணைப்பாளர் இல.முருகன் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் ராஜாமணி, நகர முன்னணி பொறுப்பாளர் கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டனர்.
நாளை மின் தடை
நாளை மின் தடை திருப்பூர், டிச. 25 - திருப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராம ரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு வதாக மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரி வித்துள்ளார். இதனால் அன்றைய தினம், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர், பாரதி நகர், வலையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. தியேட்டர் ஏரியா, ஆஷர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என செற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஹெல்த் ரூ.3.50 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஸ்டார் ஹெல்த் ரூ.3.50 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு திருப்பூர், டிச.25 - ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்தி ருந்த பயனாளிக்கு சொத்தை காரணங்களை கூறி காப்பீடு தர மறுத்த அந்த நிறுவனம், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண் டும் என்று திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர் பிச்சம்பாளையம் லக்கி நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி தனலட் சுமி. அர்ஜுனன் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் தனது குடும்பத் தாருக்கு ரூபாய் 4 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்தி ருந்தார். இந்நிலையில் தனலட்சுமிக்கு உடல் நலக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. மருத்துவ செலவுத் தொகை ரூ.3 லட்சத்து 53 ஆயி ரத்து 233 மற்றும் மருந்துகளுக்கான செலவு ரூ.52,188 என மொத்தம் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 421 செலவானது. இதில் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ செலவுக்கான காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அர்ஜுனன் விண்ணப்பித்திருந்தார். எனினும் சில்லறை காரணங்களை சுட்டிக்காட்டி மருத்துவ காப்பீடு தொகை வழங்க முடியாது என்று திருப்பூர் கிளை ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர். இது குறித்து மேல்முறையீடு செய்தும் மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்க உறுதியாக மறுத்துவிட்டனர். எனவே அர்ச்சுனன் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினர் மீது வழக்கு தொடுத்தார். மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்காததால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி, காப்பீட்டுத் தொகையை யும், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடும் தர வேண்டும் என கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப் பட்ட அர்ஜுனனுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தார் மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்க வேண்டும். அதை வழக்கு தொடுக்கப்பட்ட நாளிலிருந்து எட்டு சதவீத வட்டியுடன் கணக்கிட்டு தர வேண்டும். அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த இரண்டு மாதத்திற்குள் ளாக இந்தத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்ப ளித்து உள்ளது. பாதிக்கப்பட்ட அர்ஜுனன் சார்பில் மூத்த வழக் கறிஞர் வை.ஆனந்தன் ஆஜரானார்.
அவிநாசி அருகே தொழிலாளி தீ வைத்து தற்கொலை முயற்சி
அவிநாசி அருகே தொழிலாளி தீ வைத்து தற்கொலை முயற்சி அவிநாசி, டிச.25 அவிநாசி அருகே பஞ்சர் கடை தொழிலாளி செவ்வா யன்று இரவு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட் டார். அவிநாசி அருகே நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பலத்த காய மடைந்த அந்நபரை மீட்டு கோவை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணை யில், அவர் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் பணியாற்றும் ரவி (39) என்பதும், சமீப காலமாக மன நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரியவந்தது. இவ ருக்கு திருமணமாகி மனைவி நித்யா (35), இரு குழந்தை கள் உள்ளதாகத் தெரிகிறது.
பாலியல் தொல்லை: போஸ்கோவில் ஒருவர் கைது
அவிநாசி, டிச.25- பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை செவ்வாயன்று போலீசார் கைது செய்தனர். குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலை யில் வசித்து வருபவர் தனபால் (36). எலக்ட்ரீசி யன். இவர் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலி யல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவிநாசி அனைத்து மகளிர் காவ லர்கள் போஸ்கோ சட்டப் பிரிவில் வழக்குப்ப திவு செய்து, தனபாலை செவ்வாயன்று கைது செய்தனர்.
ஏரியில் மூழ்கி சிறுமி பலி
ஏரியில் மூழ்கி சிறுமி பலி தருமபுரி, டிச. 25- அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், ஒபிலி நாயகனாஅள்ளி அடுத்த மயிலாப்பூர், கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (37) மேஸ்திரி, இவருக்கு திருமணம் முடிந்து 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் காவியா (13), அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாயன்று காலை காவியா, தனது நண்பர்களுடன் ஆலமரத்து ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது காவியா ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கியவர் வெகுநேரமாகியும் வெளியே வராததால் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் குளத்தில் மூழ்கி காவியாவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
ஈரோடு, டிச.25- ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சியில் சிஐடியு வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை யிலும் உடன்பாடு ஏற்படாததால், வருகின்ற 30 ஆம் தேதியன்று பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் பணி நிரந்தரம் இன்றி பணியாற்றும் தூய்மைப் பணியாளர் கள், குடிநீர் விநியோகிப்போர், ஓட்டுநர், சுகா தார மேற்பார்வையாளர்கள், டெங்கு, மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர்கள், அலு வலகத்தில் பணியாற்றுபவர்கள் ஆகி யோருக்கு அரசாணைப்படி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியன்று முதல் ஊதியம் உயர்த் தப்பட வேண்டும். ஆனால், கடந்த 8 மாதங் களாக சம்பளம் உயர்த்தப்பட வில்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் மாந கராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, தினசரி ரூ.30 வீதம் மாதம் ரூ.780 சம்பளம் உயர்த்த வேண்டும். தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் வருகின்ற 26 ஆம் தேதி யன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக் கப்பட்டது. தொழிலாளர் நல அலுவலர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். திங்களன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் மாநகராட்சி சார்பில் துணை ஆணை யர், நகர் நல அலுவலர், 4 ஆவது மண்டல சுகா தார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்ட னர். சிஐடியு சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற் றுக் கொண்டாலும், ஊதிய உயர்வு அளிப் பது குறித்து ஆணையாளரிடம் கேட்டு தெரி விக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்த நிலையில், பேச்சுவார்த்தை செவ்வாயக் கிழமையும் நடைபெற்றது. அதிலும் உடன் பாடு ஏற்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3 ஆம் மண்டலத்திற்குட் பட்ட 50 ஆவது வார்டு கோரிக்கைகள், வேலை நிறுத்தம் மற்றும் அதன் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர் பான கூட்டம் புதனன்று நடைபெற்றது. அந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத தால், வருகின்ற 30 ஆம் தேதியன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என சிஐடியு நிர் வாகிகள் தெரிவித்தனர்.