நாமக்கல், டிச. 25- ஐந்து வருடத்திற்கும் மேலாக கிளினிக் வைத்து மருத்து வராகவே வலம் வந்த போலி பெண் மருத்துவர் கைது செய் யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி. இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்கா லிக பணியாளராக பணியாற்றியுள்ளார். இவரது கணவர் சுந்தரமூர்த்தியின் சகோதரி, சேலம் அரசு மருத்துவமனை யில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் வெப்படை பகுதியில் வசிக்கும் பொழுது தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். அரசு பணி கிடைத்ததும் அவர் அரசு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்த கிளினிக்கை தொடர்ந்து அம்சவல்லி நடத்தி வந்துள்ளார். அம்சவல்லி கடந்த ஐந்து வருடமாக இப்பகுதியில் மருத்துவராகவே வலம் வந்துள்ளார். இவரிடம் மருத்துவம் பார்த்த சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அப்பொ ழுது நோயாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், குமா ரபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர், செவ்வாயன்று வெப்படை போலீசாருடன் கிளினிக்கில் திடீர் சோதனை செய் தனர். அப்போது, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அம்சவல்லி, கையும்-களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து மருத்துவ அலுவலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில், வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து, கிளினிக்கை சீல் வைத்து, அம்சவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.