games

img

இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் - ஐசிசி அறிவிப்பு!

விராட் கோலியின் தவறான நடத்தையால், போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதித்து ஐசிசி அறிவித்துள்ளது.

பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.

10ஆவது ஓவர் முடிந்த பிறகு சாம் கான்ஸ்டாஸ் கிரீஸில் இருந்து அந்தப் பக்கம் நடந்து செல்லும்போது, விராட் கோலி வேண்டுமென்றே அவரது பக்கம் வந்து தோள்பட்டையால் இடித்துவிடுவார். பின்னர் இருவரும் ஏதோ பேச, கவாஜாவும் நடுவரும் வந்து சமாதானம் செய்தார்கள். மெல்போர்ன் மைதானத்தில் 90,000 மக்களுக்கு மத்தியில் விராட் கோலி அறிமுக வீரரிடம் நடந்துகொண்ட விதம் முகம் சுழிக்க வைக்கிறது.

ஐசிசி விதி 2.12இன் படி கிரிக்கெட் ஒருவரை ஒருவர் உடலால் மோதிக்கொள்ளும் விளையாட்டு கிடையாது. ஆட்டத்தில் உடலை தொடுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. முறையற்ற வகையில் எதிரணியினரின் உடலை தொடுவது விதிமுறையை மீறுவதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதமும் அபராத புள்ளி (டீமெரிட் பாயிண்ட்) ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 311/6 ரன்கள் குவித்தது.