games

img

10 ஆண்டுகளில் இல்லாத சரிவு – 22ஆவது இடத்தில் விராட் கோலி!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 22ஆவது இடத்திற்கு விராட் கோலி பின்தங்கியுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என இழந்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார், இதனால் அவர் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை  வெளிப்படுத்தி வரும் விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தரவரிசை பட்டியலில் 22ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். இதேபோன்று, இந்திய கேப்டன் ரோகித் சர்மா 26ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும்,  நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் 2ஆவது இடத்திலும், ஹாரி புரூக் (இங்கிலாந்து) 3ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.