புயல் மீட்புப்பணியில் அலட்சியம்: ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்
டானா புயலால் ஸ்பெயினின் சுயாட்சி பகுதியான வலென் சியா நகரில் ஏற்பட்ட பாதிப்பை மிக மோசமான அலட்சிய மான முறையில் கையாண்டதற்காக அரசாங்கத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத் தியுள்ளனர். வலென்சி யா தன்னாட்சிப்பகுதி அரசின் அலுவலகத் தை நோக்கி பேரணி யாக சென்ற மக்களை தடுத்ததுடன் அமைதி யாக போராடிய மக்க ளில் சிலர் மீது தாக்குத லையும் நடத்தியுள்ளது. அரசின் அலட்சியம் காரணமாக 200க்கும் அதிகமான மக்கள் புயல் பதிப்பில் பலியானது குறிப்பிடத்தக்கது.
காசா, லெபனானில் தொடரும் இஸ்ரேலின் இனப்படுகொலைகள்
காசா மற்றும் லெபனானில் 24 மணிநேரத்திற்குள் 70 க்கும் மேற்பட்டவர்களை கொடூரமான முறைகள் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது. வடக்கு காசாவில் அமைந்துள்ள ஜபா லியா அகதிகள் முகாம் மீது இஸ் ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி 13 குழந்தைகள் உட்பட 33 அப்பாவி பாலஸ்தீனர்களை படுகொலை செய்தது. அதேபோல தெற்கு லெபனா னில் 31 பேரை இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது.
சவூதி ராணுவத் தளபதி ஈரான் பயணம்
சவூதி அரேபியா தலைமைத் தளபதி ஃபயாத் அல்-ருவைலி ஈரானுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த மாதம் இரு நாடு கடற் படையும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட் டன.இந்நிலையில் மீண்டும் ஒரு ஆக் கப்பூர்வமான பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளன. ஈரான் மற்றும் சவூதிக்கு இடையே பல ஆண்டு கள் நீதித்து வந்த முரண்பாட்டை சீனா பேச்சுவார்த்தை மூலம் சரி செய்த பிறகு தற்போதைய நடவடிக்கைகள் முன்னேற்றத்தை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேசில் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு
பிரேசில் நாட்டின் குவாருல்கோஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலை யமான அங்கு இரவு நேரம் காரில் வந்தி றங்கிய மர்ம நபர் கள் சிலர் விமான நிலையத்துக்குள் புகுந்து கண்மூடித் தனமாக துப்பா க்கி சூடு நடத்தி யுள்ளனர். இந்த சம்பவத்தில் விமான நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹவுதி படைத்தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பின் படைத்தளங்கள் மீது அமெரிக்க போர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை அமெரிக்க ராணுவத் தலைமை உறுதிப் படுத்தித்தியுள்ளது. செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு கப்பல்கள் மீது ஹவுதி படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலை யில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டுப்படை அமைத்து ஹவுதி அமைப்பின் தளங்கள் மீதும் ஏமன் தலைநகர் மீதும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.