இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான "இனஅழிப்பு போர்" நடத்தி வருகிறார் என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மிக கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், காசா மற்றும் பிற பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் எதிர்காலத்தில் அரபு-பாலஸ்தீன சந்ததிகளை இன அழிப்பு செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிட்லர் கால பாசித்துடன் நேதன்யாகுவை ஒப்பிட்டு கண்டித்துள்ளார்.