world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா-ஆப்பிரிக்கா  பொருளாதார ஒத்துழைப்பு மன்ற மாநாடு

ரஷ்யா- ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான  பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் முதல் மாநாடு ரஷ்யாவில் நடந்துள்ளது. இம்மா நாட்டில் 40 ஆப்பிரிக்க நாடுகளைச்  சேர்ந்த அமைச்சர்கள் உள் ளிட்ட 1500 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள னர். 2023 ஆம் ஆண்டு ரஷ்யா ஆப்பி ரிக்க நாடுகளுக்கு இடையே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் (24.5 பில்லியன் டாலர்கள்) அதிகமான வர்த்தகம் நடந்துள்ளது. இது புதிய வர லாற்று உச்சம் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி தெரிவித்துள்ளார். 

அமெ. தேசிய பாதுகாப்பு  ஆலோசகராக மைக் வால்ட்ஸ் 

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியை சேர்ந்த மைக் வால்ட்ஸை தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நிய மிக்க முடிவு செய்துள் ளார். வால்ட் பலமுறை சீனா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என பேசி வந்தவர். தீவிர சீன எதிர்ப்பாளர். டிரம்ப்பின் விசுவாசி யான வால்ட்ஸ் ஏற்க னவே அமெரிக்க தேசிய காவல்துறையின் கர்னலாகவும் பணி புரிந்தவர். அமெ. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நிய மனத்திற்கு செனட் ஒப்புதல் தேவை யில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேதன்யாகு இன அழிப்பு செய்கிறார்; வெனிசுலா ஜனாதிபதி மதுரோ சாடல்

இஸ்ரேல் பிரத மர் பெஞ்சமின் நேதன் யாகு பாலஸ்தீன மக்களுக்கு எதி ரான “அழிப்புப் போர்” நடத்தி வருகிறார் என்று வெனிசுலா  ஜனாதிபதி நிக்கோ லஸ் மதுரோ மிக கடு மையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்துள்ளார். மேலும் காசா ​ மற்றும் பிற பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் எதிர் காலத்தில் அரபு-பாலஸ்தீன சந்ததிகளை இன அழிப்பு செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஹிட்லர் கால பாசிசத்துடன் நேதன்யாகுவை ஒப்பிட்டு கண்டித்துள்ளார்.

இஸ்ரேல் குண்டுவீச்சு காரணமாக 60 சதவீத மருத்துவமனைகள் மூடல் 

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதலின் காரணமாக கிட்டத்தட்ட 60 சதவீத சுகாதார மையங்கள் மூடப்பட்டு விட்டன. 17 மருத்துவ மனைகள்,127 முதன்மை பராமரிப்பு மையங்கள் மற்றும் மருந்தகங்கள் மூடப் பட்டுவிட்டன. இதனை உலக சுகாதார அமைப்பின் மத்திய கிழக்கு பகுதிக்கான அலுவலகம் (WHO-EMRO) தெரிவித்துள் ளது. பாலஸ்தீனம், காசா போல் லெபனா னிலும் இஸ்ரேல் ராணுவம் சுகாதார கட்டமைப்புகளை திட்டமிட்டு அழித்து வருகிறது.

உக்ரைனில்  வெள்ள அபாயம்:  அதிகாரிகள் எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு அணையின் அருகே ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல்  நடத்திய தாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் அணையின் பலம் குறைந்துள்ளது எனவும், போர்க் காலத்தில் பராமரிப் புப் பணி மேற்கொள் ளவும் முடியாத சூழல் உள்ளதால் மழை நேரத்தில் தண்ணீர் அதிகரித்து  அணை உடைய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால் அருகி லுள்ள கிராமங்களுக்கு   அந்நாட்டு அதி காரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.