states

img

ஜார்க்கண்ட்டில் முதற்கட்டத் தேர்தல் - 9 மணி நிலவரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதற்கட்டத் தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி 13.03% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக சிம்டேகா 15.09%, லோஹர்டகா மற்றும் கோடெர்மாவில் 14.97% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பிற மாவட்டங்களான செரைகெல்லா-கர்சவான் 14.62% வாக்குகளும், ராம்கர் மற்றும் குந்தி 14.37% வாக்குகளும், கும்லா 13.93% வாக்குகளும், மேற்கு சிங்பூம் மற்றும் லதேஹார் 13.80% வாக்குகளும், கர்வா 13.41% வாக்குகளும், ஹசாரிபாக் 13.20% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தலைநகர் ராஞ்சியில் 12.06% வாக்குகளும், பாலமுவில் 11.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கிழக்கு சிங்பூமில் 11.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.