world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காசாவில் வெள்ளை பாஸ்பரஸ்  குண்டுகளை வீசிய இஸ்ரேல் 

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை  24 முறை இஸ்ரேல் ராணுவம் காசாவில் வீசியுள்ள தாக ஐ.நா மனித உரிமை  உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது  இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை, போர்க்குற்றங்க ளில் ஈடுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்து கிறது.2023 நவம்பர் முதல் 2024  ஏப்ரல் வரை நடைபெற்ற தாக்குதல் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலான அறிக்கையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றால் கலிபோர்னியாவில்  வேகமாக  பரவும் காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகா ணத்தில் பலத்த காற்றினால் மிக வேக மாக காட்டுத்தீ பரவி வருகிறது.70,000 மக்கள்  வசிக்கும் அப்பகுதியில் இருந்து இதுவரை 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளி யேற்றப்பட்டுள்ளனர்.800 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மணிக்கு 129 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் காற்றின் வேகம் குறையும் போது தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் ஒவ்வொரு நாளும்  50 பேர் படுகொலை 

லெபனானில் ஒவ்வொரு நாளும் 50 பேரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்து வருவதாக தகவல்கள் வெளி யாகி வருகின்றது. 13 மாதமாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 200 குழந்தைகள் மற்றும் 600 பெண்கள் உட்பட 3,100 க்கும் மேற்பட்டோர் படுகொலையாகியுள்ளதாக  லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை துவங்கிய பிறகு படு கொலைகள் அதிகரித்துள்ளன.

ராணுவ வீரர்களை குறிவைத்து  பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெஷாவர் ரயிலில் ஏறி பயணிக்க இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறி வைத்து  தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள் ளது. இதில் 16 ராணுவ வீரர்கள் உட்பட  26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் இது வரை 46 ராணுவ வீரர்கள் உட்பட  62 பேர்படுகாய மடைந்துள்ளனர். பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற பயங்கரவாத அமைப்பு தற்கொலைப் படை தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது.

கனடா பிரதமர் தோல்வியடைவார் எலான் மஸ்க் கருத்து 

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரான  எலான் மஸ்க்  தெரிவித்துள்ளார். காலிஸ்தான்  பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கு தொடர்பாக இந்தியா மீது ட்ரூடோ  குற்றச்சாட்டு வைத்த பிறகு தொடர்ந்து உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் அவப்பெயர் உருவாக்கி வருகிறது. அதுமட்டு மின்றி, கூட்டணி கட்சியினரும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அது தேர்தலில் அவருக்கு பின்னடைவை உருவாகும் என கூறப்படுகிறது.