போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தயார் – ஹமாஸ் அறிவிப்பு
போரை 60 நாட்கள் இடைநிறுத்த டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இது குறித்து பேச இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் பேச்சுவார்த்தையை “உடனடியாக” துவங்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. உணவுப் பொருள் விநியோக நிலையத்திற்கு அருகே இஸ்ரேல் நடத்திய திட்டமிட்ட தொடர்ச்சியான தாக்குதல்களால் இதுவரை 600 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கனமழை வெள்ளத்தால் 24 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரவு முழுவதும் சுமார் 25 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதனால் குவாடலூப் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர். ஹெலிகாப்டர் பயன்படுத்தி நடத்தப்பட்ட துரித மீட்புப்பணிகளால் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கோடைக்கால முகாமில் பங்கேற்றிருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.