நாட்டின் பிற மாநிலங்களில் முதலீடு செய்ய வரும் பெரிய நிறுவனங்களை பாஜக தலைமை யிலான மோடி அரசு தலையிட்டு, முதலீடு களை குஜராத் மாநிலத்திற்கு கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக “தி நியூஸ் மினிட்” வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பில் “தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்ய வந்துள்ள நிறுவனங் களை, குஜராத்திற்கு வருமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்திற்கு சென்றால், ஒன்றிய அரசிடமிருந்து பெரும் உதவியும் சலுகைகளும் வழங்கப்படும் முக்கிய வாக்குறுதியும் பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க செமி கண்டக்டர் நிறுவனமான “மைக்ரான் டெக்னாலஜி” தமிழ்நாடு அல்லது தெலுங் கானாவில் குறைக்கடத்தி ஆலையை தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடிரென ஜனவரி 2023இல் குஜராத்தில் அகமதாபாத் அருகே சனந்தில் குறைக் கடத்தி ஆலை தொடங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகே “மைக்ரான் டெக்னாலஜி” நிறுவனம் தனது முடி வை மாற்றிக்கொண்டது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா அரசு கடிதம் அனுப்பி யிருந்தது. உடனே அமெரிக்க செமிகண்ட க்டர் நிறுவனம் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஒன்றிய அரசு பதில் அளித்து பிரச்சனையை திசை திருப்பியது” என அந்த செய்தி தொகுப் பில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டை ஈர்ப்பதில் ஒன்றிய அரசு பெரும் முட்டுக்கட்டை போடுவதாகவும், தமிழ்நாட்டிற்கு வந்த ரூ.6000 கோடி முதலீட்டை ஒன்றிய அரசு தலையிட்டு குஜராத்துக்கு கொண்டு சென்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார். இதே போல மகாராஷ்டிராவில் உள்ள வேதாந்தா-பாக்ஸ்கான் திட்டமும், டாடா ஏர்பஸ் தயாரிப்பு பிரிவும் குஜராத்திற்கு மாற்றப் பட்டதாக “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சியும் சமீபத்தில் குற்றம்சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.