states

img

சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு ஒன்றிய அரசு வழிவகுக்கிறது

திருச்சூர் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருவதாக  கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார்.  கேரளத்தில் சேலக்கரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசுகை யில்,”மக்களை எப்படி பிரிக்கலாம் என ஒன்றிய ஆட்சியாளர்கள் சிந்திக்கின்றனர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் வகுப்புவாதப் பிரசா ரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக சிறுபான்மை யினர் நமது சமூகத்தில் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பிரிவினர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சிறுபான்மையினரை பாதுகாக்கும் நிலைப்பாட்டை கடைபிடிக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை கடைபிடிக்கிறது. பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் இதுதான். இந்த நிலை நாகரிக உலகிற்கு ஏற்றதல்ல என பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. நாட்டின் ஒரு பிரிவினருக்கு எதிராக உள்துறை அமைச்சரே பேசியுள்ளார். மதவாதத்தை தூண்டி ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினரை தூண்டிவிட ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” என அவர் கூறினார்.