இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மோடி அரசியலமைப்பு சிவப்பு புத்த கத்தை நகர்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டு மொத்த அரசியலமைப்பு இல்லை என்றெல் லாம் கூறி வருகிறார். பாஜகவும், பிரதம ரும் சித்தரிப்பது போல அரசியலமைப்பு சிவப்பு புத்தகம் வெற்றுக் காகிதம் இல்லை. அதனால் பிரதமர் மோடியை மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம் ஆகும்” என அவர் கூறினார்.