81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக (43 தொகுதிகள் - நவ., 13 மற்றும் 38 தொகுதிகள் - நவ., 13) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை நிர்ணயிக்கும் முஸ்லிம் வாக்குகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வரும் மாநிலம் என்றாலும், முஸ்லிம் மக்களும் அங்கு கணிச மான அளவில் வாழ்ந்து வருகின்ற னர். அதாவது மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இதில் ஜம்தாரா, பாகூர், ராஜ்மஹால், கோடா, மதுபூர், காண்டே மற்றும் துண்டி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை யாக வாழ்கின்றனர். அதே போல மகாகம, ராஜ்தன் வார், ராஞ்சி, ஹதியா, சரத், பங்கி, தும்ரி, பகோதர், மந்தர், கன்கே மற்றும் சந்தன்கியாரி உள்ளிட்ட 11 சட்டமன்ற தொகுதிகளில் பழங் குடியின மக்களைப் போலவே முஸ்லிம் மக்களும் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர். அதாவது மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 18 தொகுதிகள் முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலு த்துபவையாக உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட 18 தொகுதிகள் தான் ஜார்க்கண்டில் யார் ஆட்சி அமைப்பதை நிர்ணயிக்கவும் செய் கிறது. இதனால் தான் ஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பழங்குடி மக்க ளின் வாக்குகளை போல முஸ்லிம் மக்களின் வாக்குகளும் செல்வா க்கு மிகுந்தவையாக உள்ளது.
கள ஆய்வு
இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்களவை தேர்தல் போல அல்லாமல் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி முஸ்லிம் வாக்குகளை மொத்தமாக அள்ளும் என ஒன் இந்தியா செய்தி (ஆங்கிலம்) நிறுவனத்தின் கள ஆய்வு முடிவில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கள ஆய்வு அறிக்கை யில், “ஜார்க்கண்டில் மொத்தம் 3.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 20% முஸ்லிம்கள் (கிட்டத் தட்ட 70 லட்சம் வாக்குகள்) ஆவர். இதனால் தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கள ஆய்வின் பொழுது ஜார்க்கண்ட் முஸ்லிம் சமூகத்தினர் ஜேஎம்எம் கட்சியின் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரனின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக கூறுகின்ற னர். சமூகப் பாதுகாப்பு, சிறு பான்மை நலனில் ஹேமந்த் சோரன் அரசு எடுத்துள்ள நிலைப்பாடுகள் முஸ்லிம் சமூகத்தினரைக் கவர்ந்துள்ளது. இதனால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரியாமல் ஹேமந்த் சோரன் தலைமையிலான “இந்தியா” கூட்டணிக்கு மொத்தமாக செல்ல வாய்ப்புள்ளது” என கூறப்பட்டுள்ளது
மோடி பொய்யர்
கள ஆய்வில் முகமது பரீத்கான் என்ற வாக்காளர் கூறுகையில், “ஹேமந்த் சோரன் அரசின் நட வடிக்கைகளால் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க ளும் மகிழ்ச்சியில் உள்ளனர். அத னால் சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் கூட்டணி வெல்லவே வாய்ப்புகள் அதிகம். எங்கள் தொகுதியில் (ராஞ்சி) ஜேஎம்எம் சார்பில் மஹுவா மாஜி போட்டி யிடுகிறார். நிச்சயம் அவருக்கு அனைத்து சமூகத்தினரும் ஆதரவு அளிப்பார்கள்” என அவர் கூறி னார். அதே போல பாபர் என்ற மற் றொரு வாக்காளர்,”பாஜக ஜூம்லா செய்து வருகிறது. 2014 முதல் பிரதமர் மோடி பல வாக்குறுதி களை அளித்து வருகிறார். ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. கருப்புப் பணம், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். அதேநேரம் ஜார்க் கண்டில் ஹேமந்த் சோரன் மக் களுக்காக உழைத்துள்ளார். அவ ரது திட்டங்கள் ஏழை மக்களைச் சென்றடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரிய வாய்ப்பில்லை
சமீபத்தில் நடைபெற்ற மக்கள வை தேர்தலில் முஸ்லிம் மக்க ளின் வாக்குகள் பிரிந்ததால் ஜார்க் கண்டில் மொத்தமுள்ள 14 தொகு திகளில் பாஜக 8, கூட்டணி கட்சி யான ஜார்க்கண்ட் மாணவர்கள் பேரவை 1 என தேசிய ஜனநாயக கூட்டணி 9 இடங்களில் வென்றது. ஆனால் மாநிலத்தை ஆளும் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி வெறும் 5 தொகுதிகளை (ஜேஎம்எம் - 3, காங்கிரஸ் - 2) மட்டுமே வென்றது. இத்தகைய சூழலில் மக்க ளவை தேர்தல் போல் அல்லாமல் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்க ளின் வாக்குகள் பிரிய வாய்ப்பில் லை என்றும், மாநிலத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மொத்தமாக “இந்தியா” கூட்டணி அள்ளும் என கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன. மாநில அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜார்க்கண்டில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஒரே அணி யாக களம் காணவில்லை. ஜேஎம் எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி உள்ளி ட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்ட ணிகளாக தேர்தலை எதிர்கொள் கின்றன. அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (9 தொகுதிகளில்) கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சி கள் குறிப்பிட்ட தொகுதிகளில் தனி த்து போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் ஜேஎம்எம் - காங்கி ரஸ் - ஆர்ஜேடி கட்சிகளுக்கு ஆத ரவாக தேர்தல் பிரச்சார வேலை களில் இடதுசாரி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி தேர்தல் அறிக்கையில் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.