பாபா ராம்தேவிடம் யோகா கற்றுக் கொண்டீர்களே யானால் உங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 06 ரூபாயாக தெரியும் என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூனுடன் குறிப்பிட்டுள்ளார்.
*********************
கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
*********************
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் 103 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
*********************
ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
*********************
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 12,194 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320-ஆக அதிகரித்துள்ளது.
*********************
“மைத்ரி தடுப்பூசி’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கரீபியன் தீவுகளான டொமினிகன் குடியரசு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
*********************
தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னய்ய குமார் உள்பட 9 பேர் மார்ச் 15 ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
*********************
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த பரிந்துரையை ஏற்று, மாநிலங்களவைத் தலைவா் வெங்கைய்யா நாயுடு இதனை அறிவித்துள்ளார்.
*********************
ஊடகவியலாளா் ராஜ்தீப் சா்தேசாய் நீதித்துறையை விமா்சித்து ட்விட்டரில் பதிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதையும் தாமாக முன்வந்து பதிவு செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
*********************
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது தொடா்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
*********************
தென் ஆப்பிரிக்கா வகை கொரோனா தீநுண்மியால் 4 பேரும் பிரேசில் வகை கொரோனா தீநுண்மியால் ஒருவரும் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
*********************
ஜார்கண்ட், பீகார் மாநில முன்னாள் ஆளுநா் ரமா ஜோய்ஸ் (89) பெங்களூருவில் காலமானார்.
*********************
தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்ற தாக எழுந்த புகார் தொடா்பான வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் பூபேந்தா் சிங் ஹூடா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நால்வா் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
*********************
பீகார் மாநிலத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி ஆக்கிய தனியார் பள்ளி முதல்வருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
*********************
இந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் லேசான விரிசல் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
*********************
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்ணின் தோளில் இளைஞரை அமர வைத்து 3 கி.மீ. தொலைவுக்கு நடக்க வைத்து தாக்கிய உறவினா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
*********************
ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,669 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
*********************
நாட்டில் இதுவரை 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
*********************
கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
*********************
மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
*********************
10 தினங்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உருண்டதால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை முழுமையாக மீட்கும் வரையிலும் மீட்புப்பணிகள் தொடரும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பி.கே.திவாரி தெரிவித்துள்ளார்.
*********************
மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 30.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி தெரிவித்துள்ளது.
*********************
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
*********************
விருதுநகர் - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் அக்டோபர் 2021க்குள் முடிவடையும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
*********************
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழனன்று (பிப்.18) மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
*********************
திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தானே தவிர, தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
*********************
தமிழகத்தில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
*********************
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 104.32 அடியாக சரிந்தது.
*********************
தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லை என்ற நிலை தொடா்வது வேதனையளிக்கிறது என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவரும் தமிழ்ப்பணி இதழ் நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் கூறியுள்ளார்.
*********************
சென்னை காவல் ஆணையா் தொடக்கி வைத்த குழந்தைகள் பாதுகாப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 15 நாள்களில் 435 குழந்தைகள் மீட்கப்பட்டன.