கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கிய சீனாவுக்கு ஜிம்பாப்வே நன்றி தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே அரசு மற்றும் மக்களின் தொற்றுநோய் தடுப்பு ஆற்றலை இது வலுப்படுத்தும். தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள ஜிம்பாப்வே விரும்புகின்றது என்று அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் பிப்ரவரி 11 ஆம் நாள்கூறினார். சீனாவின் கோவிட்-19 தடுப்பூசி உலக சுகாதார அமைப்பின் அங்கீகராம் பெற்றுள்ளது. இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, பிரேசில்,ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா ஆகிய நாடுகளில்இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீன தடுப்பூசிமீது ஜிம்பாப்வே அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
***********************
இலங்கை நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் தன்னால் கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
***********************
அமைச்சர் சரத் வீரசேகர, மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளதாகவும் அதனாலேயே அவர் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் இலங்கை தமிழ்காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ
ராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
***********************
தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதை தடுப்பதற்கும் தமிழ்மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்குவதற் காகவுமே, சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இதுவொரு முழுமையான ஜனநாயக விரோத செயற்பாடு. அவ்வாறான சட்டமூலம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக தாம் செயற்படுவதாகவும் இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசாங்கம் செய்யும் பட்சத்தில், சர்வதேச சமூகத்திற்கு முன்பாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
***********************
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மாடு ஆண்டில் அனைத்து சீன மக்களுக்கும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஒலிம்பிக் விளையாட்டுக்கு, இவ்வாண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. அமைதி,ஒற்றுமை மற்றும் நட்பு எழுச்சியில், உலகம் ஒன்றுகூடி மகிழும். இதற்கு பெய்ஜிங் தயாராகியுள்ளது. சீனா மீது நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றோம். 30 கோடி சீன மக்கள் பனி விளையாட்டில்கலந்துகொள்ள வேண்டிய ஜிஜின்பிங்கின் விருப்பம் நனவாக உள்ளது. அவரது தலைமையில்,மாடு ஆண்டில் சீனா மாபெரும் முன்னேற்றம் அடையும் என்று நம்புவதாக பாச் தெரிவித்துள் ளார்.
***********************
சீன ராணுவ மருத்துவ ஆய்வகம் கேன்சைனோபயோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பிப்ரவரி 11 ஆம் நாள்மெக்சிகோவை சென்றடைந்தன. இந்த தடுப்பூசிகளுடன் மெக்சிகோவில் மேலதிக மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மெக்சிகோ துணைவெளியுறவு அமைச்சர் பெரால்டா தெரிவித்துள் ளார். சீனாவின் உதவிக்கு நன்றி என்று மெக்சிகோவெளியுறவு அமைச்சர் எப்ரார்டு ச்சௌபொன் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.