india

img

14 உயர் நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவை கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

நீதிபதி சஞ்சய் அகர்வால் - சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி தினேஷ் மேத்தா -ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி அவ்னீஷ் ஜிங்கன் - ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் - அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி மானவேந்திரநாத் ராய் - குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி டோனாடி ரமேஷ் - அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி சந்தீப் நட்வர்லால் பட் - குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி சந்திரசேகரன் சுதா - கேரள உயர் நீதிமன்றத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி தாரா விட்டஸ்தா கஞ்சு - தில்லி நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி சுபேந்து சமந்தா - கல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும் பணியிட மாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.