india

img

தலைமை தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை அல்ல என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

வாக்குத் திருட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.  இதற்கு, வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை அல்ல என தலைமை தேர்தல் ஆணையருக்கு திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: “நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.