ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க ஆவணங்கள் சரிபார்ப்பு தொடங்கப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளதாக ஒன்ரிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து கேள்வி எழுப்பினேன்.
இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு "ஏர் இந்தியா விபத்தில் பலியானோருக்காக டாடா சன்ஸ் உருவாக்கிய அறக்கட்டளையின் பதிவு கடந்த 18-ஆம் தேதி நிறைவடைந்துள்ளதாகவும், இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க உரிய ஆவணங்கள் சரிபார்ப்பு முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளதாகவும் " பதிலளித்துள்ளார்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.