india

img

உ.பி-யில் நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தர்சாஹரில், நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், கண்காணிப்பை பலப்படுத்தியுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. புலந்த்சாஹர் என்ற இடத்தில் மதுபானக் கடைகளுக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 405 துப்பாக்கிகள், 739 தோட்டாக்கள், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் ரூ.1.5 கோடி பணம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணை மேலும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இவ்வாயுதங்களை மறைத்து வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலை முன்னிட்டு வன்முறை நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், பாதுகாப்பு அதிக அளவில் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் என்.கோலாஞ்சி தெரிவித்தார். 

மேலும், புலந்தர்சாஹரில் ஏப்ரல் 18 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போலா சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யோகேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் பான்சி லால் பஹாடியாவும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


;