முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி கேரளத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரளத்தில் இன்று பொது விடுமுறை மற்றும் 3 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அச்சுதானந்தன் உடல் மாநிலக்குழு அலுவலகமான ஏகேஜி நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகத் திரண்டனர். பின்னர், இரவில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.