headlines

img

முகமூடியே மோடி..!

நாடாளுமன்றத்திற்கான 5 ஆவது கட்ட தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் - இன் பேச்சைக் கேட்காமல் மோடி தன்னிச்சை யாகச் செயல்படுவதாக ஊடகங்கள் எழுதத் தொ டங்கியிருக்கின்றன. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில்  தோல்விக்கான  காரணத்தை மோடி மீது சுமத்தி, ஆர்எஸ்எஸ் தன்னை யோக்கிய சிகாமணி யாக காட்டிக் கொள்ள இப்போதே தயாராகிறது.

ஏதோ கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சிக் கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஆர்எஸ்எஸ் தற்போது நழுவப்பார்க்கி றது. பாஜக என்பதே ஆர்எஸ்எஸ் செயல்திட்டத் தின் ஒரு பகுதிதானே.  மசூதியை இடித்து  கோவி லைக் கட்டியது, ஜம்மு காஷ்மீர்க்கான சிறப்புப் பிரிவு 370- ஐ நீக்கியது யாருடைய சித்தாந்தம்? பொது சிவில் சட்டம் , ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் யாருடைய செயல்திட்டம் ? 

ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு ஊதி பெரிதாக்கிய “மோடி பிராண்ட்” அப்பட்டமான நஞ்சு என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். அதனால் தான் பிராண்ட்டின் பெயரை மாற்றி மக்களை ஏமாற்றும் முயற்சியில்  ஆர்எஸ்எஸ் இறங்கியி ருக்கிறது. ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக மோடி  எப்படி இருந்தாரோ அப்படியேதான் பிரதமரான பின்னரும் இருக்கிறார்.  ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக எப்படி மோடி  விரதங் களை அனுஷ்டித்தார் என்பதை நான் அறிவேன்; “மோடி ஒரு தபஸ்வி” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பட்டம் சூட்டியது எதனால்?

2014 இல் மோடி பிரதமராகப் பதவியேற்ற மூன்றே வருடத்தில் 30 சதவிகிதம் வளர்ச்சியை ஆர்எஸ்எஸ் பெற்றிருக்கிறது என  ஆர்எஸ்எஸ்  ஆண்டறிக்கை 2017 மோடியைப் பாராட்டியது ஏன்? கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது. சங்பரிவார் அமை ப்புகளின் சொத்துக்கள் பல லட்சம் கோடியாக உயர்ந்திருக்கின்றன. ஆனால் மறுபுறம்  இந்தி யப் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் அதல பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. ஆர்எஸ் எஸ் -இன் வளர்ச்சி இந்திய ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக மாறியிருக்கிறது.   

தற்போது நடைபெறும் தேர்தலில்  ஒரு நாட்டின் பிரதமராகவோ, ஆளும் கட்சியின் பிரதி நிதியாகவோ மோடி பேசவில்லை. மாறாக ஆர் எஸ்எஸ் -இன் வெறிபிடித்த மதவெறி நஞ்சையே கக்குகிறார். ஆனால் இந்த முறை ஆர்எஸ்எஸ் இன் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாகவில்லை. மாறாக  ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரான இந்தியாக் கூட்டணியின்  போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கத் துவங்கியிருக்கின்றனர்.

மோடியும் ஆர்எஸ்எஸ்-உம் வேறுவேறல்ல. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் ஒரு கருவிதான் மோடி. அதிகாரத்திலிருந்து மோடியை அகற்றி னால் மட்டும் போதாது. பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை முறியடிப்பதன் மூலமே இந்தியாவைப்  பாதுகாக்க முடியும். 

;