headlines

img

அரசியலை தவிர வேறு என்ன?

குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்  48 பேர் உயிரிழந்தனர். அந்த குடியிருப்பில் வசித்து வந்த 176 இந்திய தொழிலா ளர்களில் 45 பேர் இறந்தனர். 33 பேர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்க ளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 23 பேர்.  தமிழகத் தைச் சேர்ந்தவர்கள் 7 பேர். மற்றவர்கள் உத்தரப்பிர தேசம், ஒடிசா உள்ளிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 

பொதுவாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிகளவில்  பணியாற்றி வருகிறார்கள். இந்த தீ விபத்தில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உயிரிழந்து விட்டதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஒருங்கி ணைக்க கேரள மாநில அமைச்சரவை கூடி சுகாதா ரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை குவைத் அனுப்ப முடிவு செய்தது. ஆனால்  ஒன்றிய அரசு அதற்கு  அனுமதி அளிக்கவில்லை. 

படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல்களை இந்தியாவில் உள்ள குவைத் தூதரகம் கேரள அரசுக்கு வழங்க வில்லை. அம்மாநில அரசு சொந்த தரவுகள் மூலம் சேகரித்த தரவுகளின்படி 7 பேர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது. அவர்களில் 4 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.  ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. அமைச்சரின் குவைத் பயணத்தின் நோக்கம், காயமடைந்தவர்களுடன் இருக்கவும், அவர்களின் தேவைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும்  மட்டுமே என்று கேரள அரசு கூறிய போதிலும் ஒன்றிய அரசு அதை ஏற்கமறுப்பது சரியல்ல.. 

துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும், காய மடைந்தவர்களை  நேரில் சந்தித்து, அவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை செய்வதும் ஒன்றிய அரசின் கடமை மட்டுமல்ல; மாநில அரசுக்கும் அந்த கடமை உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற வெளியுறவுத்துறை இணை அமைச் சர் கீர்த்தி வர்தன் சிங்கை குவைத்துக்கு அனுப்பிய மோடி அரசு, மாநிலத்தை சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமைச்சர் ஒருவர் குவைத் செல்வதை அனு மதிக்க முடியாது என சொல்வது நியாயமல்ல. இதில் நிச்சயமாக அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.  

காரணம் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி யின் 80 ஆயிரம் வாக்குகள் மடைமாற்றம் செய்யப் பட்டதால் திருச்சூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.  இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. அதில் அரசியல் ஆதாயம் அடைவதற் காகவே திட்டமிட்டு மோடி அரசு செயல்படுகி றது. தீ விபத்தில்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உதவவில்லை; ஒன்றிய அரசு மட்டுமே உதவியது எனும் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. 

;