headlines

img

எச்சரிக்கும் காலநிலை!

தீவிர காலநிலை மாற்றத்தால் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக வெப்பத்தை கடந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் செப் டம்பர் மாதங்களில் இந்தியா கண்டு இருக்கிறது. 365 நாட்களில் 318 நாட்கள் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது என இந்தியச் சுற்றுச்சூழல் அறிக்கை - 2024 தெரி விக்கிறது. 

புவி வெப்பமடைதலின் காரணமாக உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பூமியின் மொத்தப் பரப்பில், 1 சதவிகிதம் மட்டுமே நகரங்கள் உள்ளன. இதில்தான் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2050இல், உலகில் 10 பேரில் 7 பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார் கள் என உலக வளக் கழகத்தின் ஆய்வு தெரி விக்கிறது. இது புவி வெப்பமடைதலை வேகமாக அதிகரித்து அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 0.26 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரு கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்பம் இரு மடங்கு வேகமாக அதிகரித்து வருவதை புவனேஸ் வர் ஐஐடி நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நகர்ப்புறங்களில் அதிகளவிலான கட்டு மானங்களை மேற்கொள்வதும், அதிகளவிலான கரிய மில வாயுக் கழிவுகள் வெளியேற்றமுமே ஆகும். 

அதிகரித்து வரும் நகர்ப்புற வெப்பநிலை உயர்வைக் கணக்கில் கொண்டு, நகர்ப்புற திட்ட மிடல் மற்றும் கொள்கைகளை சூழலியலுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்திட வேண்டும். இந்தியா வில் கடந்தாண்டு அதிக வெப்பத்தால் மட்டும் 3,287 பேர் பலியாகியிருக்கின்றனர். 1,24,813 விலங்குகள் உயிரிழந்திருக்கின்றன. 2.21 மில்லியன் ஹெக்டேர் பயிர் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவை யெல்லாம் வெளிப்படையாக தெரிந்து பதிவு செய்யப்பட்டவை. ஆனால் இதன் தாக்கம் பொரு ளாதார ரீதியாகவும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சி யஸ் அளவுக்கு உயராமல் தடுக்க வேண்டும். ஆனால் 2023 ஆம் ஆண்டுதான் இதுவரை பதி வானதில் அதிகம் வெப்பம் நிலவிய ஆண்டாக இருக்கிறது. வரும் காலங்களில் அதாவது 2024 முதல் 2028 வரையிலான காலத்தில் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்க 47 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக உலக கால நிலை அமைப்பு எச்சரித்திருக்கிறது. 

மோடி தலைமையிலான பாஜகவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சுற்றுச்சூழல் குறியீடுகளில் இந்தியா பின்தங்கியிருக்கிறது. அதற்கு பிரதான காரணம், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வெறிக்காக இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங் களை வலுவிழக்கச் செய்ததே ஆகும். பாஜகவின் தேர்தல் தோல்விக்கு மோசமான சூழலியல் கொள்கைகளும் ஒரு காரணமாகும்.

;