headlines

img

இளைய தலைமுறையின் இந்தியா

18வது மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இத்துடன் மக்களவையில் மொத்தம் உள்ள 543  தொகுதிகளில் 500 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இத்தேர்தலில் இந்திய நாட்டின் இளம் தலை முறையினர் தற்போது உள்ள ஆட்சி அகற்றப் பட்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தெள்ளத் தெளி வாக பதிவாகியிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தில்லியில் நடந்த ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க வந்திருந்த முதல் தலைமுறை இளம் வாக்காளர்களிடம் எடுத்த பேட்டியை ஒரு தேசிய ஆங்கில நாளிதழ்  வெளியிட்டிருக்கிறது. 

மருத்துவக் கல்விக்காக  தயாரிப்பில் ஈடுபடும்  வரை எனக்கு அரசியலைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை; ஆனால் மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று சிந்தித்து அதற்காக  இறங்கிய போதுதான் நீட் உள்ளிட்ட தேர்வுகளை கொண்டுவந்து, எளிய மாணவர்கள் யாரும் அத்தகைய படிப்புகளுக்கு நுழைந்துவிட முடி யாதவாறு தற்போதைய ஆட்சியாளர்கள் எத்த னை பெரிய சுவர்களை எழுப்பி வைத்திருக் கிறார்கள் என்பது புரிந்தது என்கிறார் ஒரு  மாணவர்.

படித்த இளைஞர்களுக்கு தற்போதைய நிலையில் வேலை வாய்ப்புகள் இல்லை; புதிய வேலைவாய்ப்புகளை தற்போதைய ஆட்சியாளர் கள் எந்த வகையிலும் உருவாக்கவில்லை; இதில் உடனடியாக ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ப தற்காக நாங்கள் வாக்களித்து இருக்கிறோம் என்கிறார்கள் இரண்டு இளம்பெண்கள். இவர்களும் முதல் தலைமுறை வாக்காளர்கள். 

எங்கள் குடும்பத்தினர் இதுவரையிலும் இல்லாத விதத்தில் இப்போது மத்திய ஆட்சி யில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று  விரும்புகிறார்கள்; அந்த விருப்பத்தை நானும் புரிந்து கொண்டு வாக்களித்து உள்ளேன் என்கிறார் மற்றொரு இளைஞர். 

எனக்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஏராள மான நண்பர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த மிகப்பெரும் தலை வர், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய மாங்கல்யத்தைப் பறித்து இஸ்லாமியரிடம் ஒப்ப டைத்துவிடுவார்கள் என்று பேசினார். அது  எனது இஸ்லாமிய நண்பர்களின் உள்ளத்தை மட்டுமல்ல; எனது உள்ளத்தையும் பிளந்து விட்டது. இத்தகைய சிந்தனைகளுக்கு எதிராகத் தான் நான் வாக்களித்துள்ளேன் என்கிறார் ஓர் இளைஞர். தில்லியில் இளம் தலைமுறை வாக் காளர்கள், குறிப்பாக முதல் தலைமுறை வாக்கா  ளர்கள் நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றத்தை  முன்னறிவித்திருக் கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல. 

மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி, வேலை வாய்ப்பு,  வறுமை ஒழிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் விழுமியங்கள் போன்றவற்றைத் தான் இந்திய இளைஞர்களும் ஒட்டு மொத்த இந்  திய நாடு எதிர்பார்க்கிறது. அத்தகைய மாற்றத்தை  இந்தத் தேர்தல் நிச்சயம் உருவாக்கும் என்று  நம்பலாம்.

;