world

img

சுவிஸ் அமைதி மாநாடு ஒரு ‘மோசடி’ : ரஷ்யா விமர்சனம்

பெர்ன், ஜூன் 17- உக்ரைன் அமைதி உச்சி  மாநாட்டை ஒரு மோசடி என ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வசிலி நெபென்சியா, சுவிஸ் அமைதி மாநாடு குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த அமைதி உச்சிமாநாடு ஒரு “மோசடி முயற்சி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.  சுமார் 90 நாடுகள் பங்கேற்கும் இந்த உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. இந்நிலையில் இந்த அமைதி மாநாடு  எப்படி பலன் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உச்சிமாநாட்டில் எந்த அமைதி ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்றும் அதற்குப் பதிலாக, “மனிதாபிமான பிரச்சனைகள், அணுசக்தி பாது காப்பு,  உணவுப் பாதுகாப்பு  பற்றி விவாதிக்கப் படும் என்று சுவிஸ் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான வயோலா அம்ஹெர்ட் தெரி வித்ததாகக் கூறப்படுகிறது.  

இம்மாநாட்டில் தெற்குலக நாடுகள் பங்கேற் றாலும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் கொடுத்து போரை ஊக்குவித்து வரும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கமே  இருக் கும் என கூறப்படுகிறது.  மேலும் இம்மாநாட்டில் ரஷ்யா புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அழைப்பு விடுத்திருந்தாலும், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாரபட்சமான நிலைபாடு களின் காரணமாக அந்த அழைப்பை நாங்களே புறக்கணித்து இருப்போம் என ரஷ்யா தெரி வித்துள்ளது. சீனா கருத்து இம்மாநாட்டிக்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைதி உடன்படிக்கை ஏற்படவேண்டும் என்றால் இருதரப்பும் இருக்க வேண்டும்.  இதனால் இந்த மாநாட்டில் பங்கேற் காது என  அழைப்பை புறக்கணித்ததாக சீனா தெரி வித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் முறையான பங்கேற்பு, அனைத்து தரப்பு நாடுக ளின் சம பங்கேற்பு மற்றும் அனைத்து அமைதித் திட்டங்களைப் பற்றிய நியாயமான விவாதம் ஆகிய மூன்றும் மாநாட்டிற்கு அவசியமானது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சமமான பங்கேற்பு இல்லை என்றால்  அமைதி மாநாடு அமைதியை உறுதிப்படுத்த  முடியாது என சீன வெளியுறவுத் துறை  செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்  தெரிவித்துள்ளார்.  மேற்கு நாடுகள் குறிப்பாக ஜி-7 நாடுகள் போரை நிறுத்த விடாமல் தொடர்ந்து உக்ரைனு க்கு ஆயுதங்களை கொடுத்து வருகின்றன.  இந்த ஆண்டு நடைபெற்ற ஜி -7 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் 5000 கோடி டாலர்கள்  கடன் கொடுக்க உறுதியளித்துள்ளன. இதற்காக மேற்கு நாடுக ளால் அராஜகமான முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் 3,00,000 கோடி டாலர் சொத்துக் களை   பயன்படுத்த முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;