headlines

img

நுழைவுத் தேர்வல்ல, நுழைவைத் தடுக்கும் தேர்வு

நீட் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அண்மை யில் நடந்து முடிந்த நீட் தேர்வில் நடைபெற்ற மோச டிகள் அம்பலமாகியுள்ளன. இதனால் இதுவரை நீட்  தேர்வை ஆதரித்து வந்தவர்கள் கூட இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வில் மோசடி என்பதைவிட நீட் தேர்வே ஒரு மோசடி தான் என்பதே உண்மை. நுழைவுத் தேர்வின் மூலம்தான் தகுதி, தரம் என்பதை உறுதி செய்ய முடியும் என்ற ஒன்றிய ஆட்சியாளர்க ளின் பம்மாத்து வாதங்கள் அனைத்தும் கிழிந்து தொங்குகின்றன.

ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பலர் முழு மதிப்பெண்ணான 720ஐ பெற்றுள்ளனர். தகுதிக்கான அளவுகோல் என பொய் வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலை களிலும் ஊடுருவி பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்பத் திரும்ப நிரூபணமாகி வருகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி யுள்ளது முற்றிலும் உண்மை.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்வேறு மாநி லங்களிலும் நீட் தேர்வுக்கு எதிரான கிளர்ச்சி தீவிரமாகியுள்ளது. குஜராத் மாநிலம் கோத்ரா வில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறை கேட்டில் 2கோடி ரூபாய்க்கு மேல் கைமாறியி ருப்பதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் 35 மாணவ, மாணவியர்க்கு முன்தினமே வினா மற்றும் விடைத்தாள் வழங் கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாணவரி டமிருந்தும் ரூ.30 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பான 6 காசோலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதாக ஒவ் வோராண்டும் பக்கம் பக்கமாக கார்ப்பரேட் பயிற்சி நிலையங்கள் விளம்பரம் தருகின்றன. இங்கு பயிற்சி பெற்றவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டு மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வலை விரிக்கப்படு கிறது. பல லட்சம் ரூபாய்களை இந்நிறுவனங்கள் வசூலித்து கொள்ளையடிப்பது மட்டுமின்றி மோசடி மூலம் தேர்ச்சி பெற வைக்கிறது என்பதும் அம்பல மாகியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் மட்டும் தேர்வு நடத்தப்படுவதால் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதை உறுதி செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு மோசடியை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஜூன் 22 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும். 

;