world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஜெலன்ஸ்கி மிகப்பெரிய  வியாபாரி : டிரம்ப் 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதுவரை இருந்த அரசியல்வாதிகளிலேயே நல்ல விற்பனையாளராக இருப்பார் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விமர்சித் துள்ளார். அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்து வரும் உதவிகளை நிறுத்துவதாக  தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு வரும் ஒவ்வொரு முறையும் 6000 கோடி டாலர்களை  எடுத்துச்சென்று விடுகிறார் என கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.    

மீண்டும் ஜனாதிபதியான  சிரில் ரமபோசா 

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் சிரில் ரமபோசா. கடந்த 30 ஆண்டு களாக பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் 2024 நாடாளு மன்ற தேர்தலில் 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்நிலையில்  புதிய கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி  கூட்டணியை இறுதி செய்து ஆட்சியமைத்துள்ளார். மேலும் இரண்டாவது முறையாக சிரில் ரமபோசாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். 

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்  அமெரிக்கா பயணம் 

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் அமெரிக்காவிற்கு பய ணம் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது.  இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் அதிகரித்து வரும் மோசமான மனிதாபிமானப் பேரழிவுகள் மற்றும் லெபனானுடன் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் ஆகியவை குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டினை பெண்டகனில் சந்தித்து விரிவாக உரையாட அழைப்பு விடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபிய நெருக்கடிகளை முடிவுக்கு  கொண்டு வர அழைப்பு 

லிபியப் பகுதிகளின் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கவும், தற்போதைய நெருக்கடியை முடி வுக்குக் கொண்டு வரவும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஏராளமான வளங்கள் இருக்கும் போதி லும் பல லிபியர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். அரசியல் காரணங்களினால் அவர்கள்  துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது லிபிய மக்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவர  லிபியாவுக்கான ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி  ஸ்டெஃபனி  அழைப்பு விடுத்துள்ளார்.

6,25,000 குழந்தைகளுக்கு  கல்வி மறுப்பு 

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக காசாவில்  சுமார் 6,25,000 குழந்தைகளு க்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரி வித்துள்ளது. போர் துவங்கியதில் இருந்து காசா வில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசியுள்ளது. இதுவரை கொலை செய்யப்பட்ட 37 ஆயிரம் பாலஸ்தீனர்களில் கிட்டத்தட்ட 12 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்கள் 18 வயதுக்குட் பட்ட குழந்தைகள் என பல்வேறு சர்வதேச அமைப் புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;