மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை களை எலிகள் கடித்து, ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவம், உள்ளங்களை உலுக்கி யுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல; மாறாக, பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சி யாக நிலவும் நிர்வாக அலட்சியத்தின் சான்றாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மருத்துவ மனையில் எலிகள் மற்றும் பூச்சிகளை கட்டுப் படுத்தும் அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கையான ‘பூச்சிக் கட்டுப்பாடு’ (Pest Control) ஒருமுறை கூட மேற்கொள்ளப்பட வில்லை என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதன் விளைவாக, நோயாளிகள், குறிப்பாக குழந்தைகள், தொடர்ந்து எலிகளால் கடிக்கப் படும் அபாயகரமான சூழல் நிலவியுள்ளது.
2023-ல் மட்டும் நோயாளிகளின் காதுகள், மூக்கு, கைகள் எனப் பல உறுப்புகளை எலிகள் கடித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இறந்த வர்களின் கண்களைக் கூட எலிகள் தின்ற கொடூரம் நடந்திருக்கிறது.
தேசிய சுகாதாரக் கொள்கை (NHP) ஒவ்வொரு மாநிலமும் தனது மொத்த பட்ஜெட்டில் 8 சதவிகி தம் நிதியை சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், பாஜக ஆளும் பல மாநிலங்கள் இந்த இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. இதேபோல், தனிநபர் சுகாதாரச் செலவினத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக ளும் அதிர்ச்சியளிக்கின்றன. 2019-20 புள்ளி விவ ரங்களின்படி, கேரளம் ஒரு தனிநபருக்கு ₹10,607 செலவழிக்கிறது, ஆனால் மத்தியப் பிரதேசம் ₹4,200 மட்டுமே செலவிடுகிறது. இந்த வேறுபாடு 60 சதவிகிதத்திற்கும் அதிகம். அதேபோல, பீகார் மாநிலம் கேரளாவை விட 85 சதவிகிதம் குறைவாக செலவிடுகிறது. இதற்கு மாறாக, தமிழ்நாடு ₹6,500 செலவிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் அல்ல, அவை ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையையும், ஒவ்வொரு தாயின் நம்பிக்கை யையும் தீர்மானிக்கும் அடிப்படை காரணிக ளாகும்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முன்னுரிமை கள் மக்கள் நலனை விட, மத சார்பு திட்டங்கள் மற்றும் பிரம்மாண்டமான செலவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படும்போது, கோரக்பூர் மருத்துவமனையில் ₹68 லட்சம் செலுத்தப்படாத தால் ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டு, 63 குழந்தைகள் இறந்த சோகம் நடந்தது. இந்தத் துயரங்கள் வெறும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல, இது ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்தின் வெளிப்பாடே ஆகும்.
இந்த மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய வர்கள், குழந்தையைக் கடித்த எலியைத் தேடா மல், அதற்கு வழிவகுத்த ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையும், ஊழல் பெருச்சாளிகளையும் ஒழிக்க வேண்டும்.