headlines

img

மனுவாத தந்திரத்தை முறியடிப்போம்! சுதந்திரத்தை பாதுகாப்போம்!

மனுவாத தந்திரத்தை முறியடிப்போம்! சுதந்திரத்தை பாதுகாப்போம்!

இந்திய திருநாட்டின் 79வது விடுதலைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனை வருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தியாகத்தின் விளைச்சலான விடு தலையை போற்றிப் பாதுகாக்க இந்நாளில் உறுதி யேற்போம். அரசியல் சட்ட விழுமியங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை போன்றவற்றை பாதுகாக்க சூளுரை மேற்கொள்வோம். 

இந்தியாவின் விடுதலைத் திருநாள் என்பது ஒரு நாள் மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் நம்முடைய மூச்சுக் காற்றில் கலந்திருக்க வேண்டிய ஒன்று.  இந்தி யாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு கூறுகள் உண்டு. 1917ஆம் ஆண்டு மாமேதை லெனின் தலைமையில் சோசலிச சோவியத் யூனியன் அமைந்தவுடன் உலக மெங்கும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் அனைத்து நாடுகளுக்கும் சோவியத் நேசக்கரம் நீட்டும் என்று பிரகடனம் செய்தார். நம்முடைய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இது புதிய ரத்தத்தை பாய்ச்சியது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். 

பூரண விடுதலை என்ற முழக்கத்தை முதன்முதலாக முன்வைத்தவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள். அதுமட்டுமின்றி பெறுகிற விடுதலையின் பலன் அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் சென்றுசேர வேண்டும் என்பதற் கான போராட்டத்தையும் விடுதலைப் போராட்டத் தோடு இணைந்து முன்னெடுத்தவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள். இந்த தேசபக்த போராட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு.

நாடு விடுதலைப் பெற்ற பிறகு அமையும் நிர்வாக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்த போது மொழி வழி மாநிலங்கள் என்கிற முன்மொழிவை முன்வைத்தது பொதுவுடமை இயக்கம். பெற்ற விடுதலையை பேணிப் பாதுகாக்கவும், நாட்டின் சுயசார்பு, இறையாண்மை போன்றவற்றை பாது காக்கவும் கம்யூனிஸ்ட்டுகள் அனுதினமும் போ ராட்டக் களத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். 

மறுபுறத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் மக்களை பிளவுபடுத்தும் கருத்தி யல் கொண்டவர்களின் கையில் இன்றைய ஒன்றிய ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி என அரசியல் சட்டத்தின் சாரத்தை அர்த்தமிழக்கச் செய்ய ஒன்றிய ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கரசேவை செய்வதே ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக உள்ளது. 

நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு அதனுடைய இடத்தில் மனுவாத சாயல் கொண்ட அரசியல் சட்டத்தை கொண்டுவர இவர்கள் மேற்கொள் ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதே இந்நாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழியாகும்.