அரசியல் பழிவாங்கலுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு!
தில்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரி வால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 21 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு, இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாகும். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் அர சியல் பழிவாங்கும் வன்முகத்தை இந்தத் தீர்ப்பு அப் பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு தில்லி மாநில அரசு கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கை யில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, அமலாக் கத்துறை மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் சூழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசு கையாண்டது. குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சிறையிலடைத்து, அவரைத் தேர்தல் பரப்புரை செய்யவிடாமல் தடுத்தது, ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான எதேச்சதிகாரச் செயலாகும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகாரிகளை ஏவி மிரட்டுவது ஒன்றிய பாஜக அரசின் வாடிக்கையாகிவிட்டது.
இந்த வழக்கில், “தில்லி அரசு மதுபானக் கொள்கை வகுத்ததில் சதியோ, குற்றவியல் நோக்கமோ இருந்ததற்கான எந்தவித ஆதார மும் இல்லை” என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக் கட்டத் தீட்டிய அரசியல் சதித்திட்டம் தவிடு பொடியாகியுள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்திய அரசியலமைப்புச்சட்ட நிறுவனங்க ளை, தங்களின் அரசியல் எதிரிகளைப் பழிவாங் கும் கருவிகளாக ஒன்றிய அரசு தரம் தாழ்த்தி வருவது நாடு முழுவதும் நிரூபணமாகியுள்ளது.
கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் ஒவ்வொரு செய்தி அலைவரிசையிலும் ஊழல் வாதிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். பாஜக ஆதரவு தொலைக்காட்சி அலைவரிசை கள் ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலியான கதைகளை உருவாக்கின. பாஜ கவின் எதேச்சதிகாரப் போக்கிற்கும், குறுக்குவழி யில் தேர்தல் ஆதாயம் தேடும் அதன் மலிவான அரசியலுக்கும் நீதிமன்றம் பலத்த அடி கொடுத்துள்ளது.
அண்ணல் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டத்தின் வலிமையையும், நீதியையும் நிலைநாட்டியுள்ள தில்லி நீதிமன் றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிகார பலத்தை விட, உண்மையும் ஜனநாயகமுமே இறுதி வெற்றி பெறும் என்பதற்கு இத்தீர்ப்பே சிறந்த சாட்சி! பாஜக அரசின் பாசிசப் போக்கு முறிய டிக்கப்பட வேண்டும்.
