headlines

img

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு புதிய வகை மோசடி அச்சுறுத்தல் மக்களை வாட்டி வதைக்கிறது. “டிஜிட்டல் கைது” என்ற பெயரில் போலி காவல்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மக்களை மிரட்டி, அவர்களின் வங்கிக் கணக்கு களை காலி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய மோசடி களால் ரூ.150.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2020-ல் 1,45,000 ஆக இருந்த புகார்களின் எண்ணிக்கை 2021-ல்  4,25,000 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு இத்தகைய மோசடிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

மோசடியாளர்கள் பொதுவாக இரண்டு வழி முறைகளைப் பின்பற்றுகிறார்கள். முதலாவது, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB)  அதிகாரிகளாக நடித்து, உங்கள் பெயரில் சட்ட விரோத போதைப்பொருள் பார்சல் இருப்பதாகக் கூறி மிரட்டுவார்கள். இரண்டாவது, வங்கி அதி காரிகளாக நடித்து கேஒய்சி (KYC) புதுப்பித்தல் என்ற பெயரில் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங் களைப் பெற்று மோசடி செய்வார்கள்.

இத்தகைய மோசடிகளிலிருந்து பாதுகாப்ப தற்கு, சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக துண்டித்துவிட வேண்டும்; யாரிடமும் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரை களை அரசும், வங்கிகளும் கூறுகின்றன. அத்தோடு அவர்கள் பணி முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள்.

வணிக நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு ஊழியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பயிற்சி களை வழங்க வேண்டும்; மோசடி தடுப்பு தொழில் நுட்பங்களை செயல்படுத்தி, தரவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; அரசாங்கம், சைபர் பாது காப்பு கொள்கைகளை வலுப்படுத்தி, சிஇஆர்டி (CERT) போன்ற அமைப்புகள் மூலம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வங்கி களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மோசடி கண்டறியும் அமைப்புகளை மேம்படுத்தி, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை உடனடியாக கண்டறிந்து தடுக்க வேண்டும். 

இனிவரும் காலத்தில் டிஜிட்டல் கல்வியறிவு இன்றியமையாதது. மக்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் உடனடி யாக காவல்துறையில் புகார் செய்ய வேண்டும்.  பாதுகாப்பான கடவுச்சொற்களை பயன்படுத்து வதும் அவசியம்.

‘டிஜிட்டல் பாதுகாப்பு’ என்பது ஒவ்வொரு வரின் கூட்டுப் பொறுப்பு; அதில் அரசுக்கு கூடு தல் பொறுப்பு உண்டு. தனிநபர்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய மோசடி களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.  இவற்றையெல்லாம் கவனிக்க ஒன்றிய அரசுக்கு நேரம் இருக்கிறதா?