யுஜிசி புதிய விதிகளுக்கு தடை தீர்வல்ல!
உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பாகுபாடுகளை வேர றுக்க, மாணவர் சமூகத்தின் நீண்ட காலப் போ ராட்டங்களுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட ‘யுஜிசி 2026 சமத்துவ ஊக்குவிப்பு’ விதிமுறை களை உச்ச நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்தி ருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோரின் ‘நிறு வனப் படுகொலைகளுக்கு’ பின் எழுந்த நீதிக் கான குரலால் உருவான இந்த விதிகள், இடது சாரி மாணவர் அமைப்புகளின் தொடர் அழுத்தத் தினால் விளைந்தவை. இதனை வெறும் தொழில் நுட்பக் காரணங்களைச் சொல்லி முடக்குவது, பல்கலைக்கழக வளாகங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்குத் தரப்படும் மறைமுக அங்கீகாரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானது என்றும், இதில் பாகுபாடு குறித்த வரையறை தெளிவாக இல்லை என்றும், பொய் யான புகார்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வும் கூறி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது. உண்மையில், பாகுபாடு என்பது ஒடுக் கப்பட்ட சமூக மாணவர்கள் மீது ஏவப்படும் ஒரு தலைப்பட்சமான வன்முறை என்பதை மறைத்து, ‘பொய்ப் புகார்கள் வரும்’ என்கிற மேல்தட்டு வர்க் கத்தின் கற்பிதமான அச்சத்திற்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்தத் தடை என்பது முன்னேற்றத்திற்கான நகர்வு அல்ல; மாறாக 2012-ஆம் ஆண்டின் பழைய மற்றும் போதிய வலுவற்ற விதிகளுக்கே மீண்டும் திரும்புவதாகும்.
இவ்விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கம் இந்த புதிய விதிமுறைகளை ஒரு முதற்கட்ட வெற்றியாக வரவேற்கும் அதே வேளையில், இதில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டி அதனை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என் கிறது. குறிப்பாக, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களே இக்குழுக்களுக்குத் தலைமை தாங்குவது என்பது நடுநிலையான விசாரணை யைச் சாத்தியமற்றதாக்கும். எனவே, நிர்வா கத்தின் தலையீடு இல்லாத தன்னாட்சி அதிகா ரம் கொண்ட குழுக்களும், அதில் ஜனநாயக ரீதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிக ளும் இடம்பெறுவது கட்டாயமாகும்.
அரசும் நீதிமன்றமும் செய்ய வேண்டியது இதில் விடுபட்டுள்ள குற்றவியல் நடவடிக்கை களைச் சேர்த்து, இதனை ஒரு முழுமையான ‘ரோஹித் சட்டமாக’ மாற்றி அறிவிப்பதே ஆகும். கல்வி நிலையங்கள் சமூக நீதி காக் கப்படும் ஜனநாயகக் களங்களாக மாற வேண்டும். சமூக நீதிக்கான முன்னெடுப்புகளை முடக்க நினைக்கும் சங்-பரிவார மற்றும் அதிகார வர்க்கத்தின் போக்கினை முறியடிக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். இந்த விதிமுறைக ளை நீர்த்துப்போகச் செய்யாமல், ஐஐடி (IIT) உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்க ளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு வலிமையான சட்டமாக மாற்றும் வரை கருத்துப் போரும் களப் போரும் தொடர வேண்டும்.
