headlines

img

வழிகாட்டும் பால்கர், நாசிக்!

வழிகாட்டும் பால்கர், நாசிக்!

பால்கரின் செங்கடலும், நாசிக்கின் லாங் மார்ச்சும் வெறும் நடைபயணம் அல்ல; அது ஆளும் வர்க்கத்தின் மௌனத்திற்கு எதிராக வும், கார்ப்பரேட் நுகத்தடிகளுக்கு எதிராகவும் தொடுக்கப்பட்டபோர் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட உழைக்கும் மக்கள், 55 கிலோமீட்டர் தூரத்தை 48 மணிநேரம் இடைவிடாது கடந்த அந்த ‘லால் பாட்டா’ - அந்தச் செங்கடல் - வார்லி கிளர்ச்சியின் வரலாற்றுப் பூமியான பால்க ரில் மீண்டும் ஒருமுறை எழுந்து நிற்கிறது. நாசிக்கி லிருந்து மும்பை நோக்கி நடைபெறும் லாங் மார்ச், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விட இரண்டு மடங்கு பங்கேற்பா ளர்களுடன் தொடங்கியுள்ளது. மக்களின் கோபத் திற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

இந்த உழைக்கும் மக்கள் இன்று எதிர்கொள் வது ஒரு கொடூரமான மும்முனைத் தாக்குதல். காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து, வன உரிமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. ஏழைகளின் கடைசி வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ‘ஜிராம்ஜி’ போன்ற சட்டங்களைத் திணிக்கி றது. தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமை யைப் பறிக்கும் ‘புதிய தொழிலாளர் சட்டத் தொ குப்புகள்’ மற்றும் விவசாயிகளின் தலையில் இடியாய் இறங்கும் ‘மின்சாரத் திருத்தச் சட்டம்’ என அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே வடிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் 8.2 சதவீத வளர்ச்சி என்று புள்ளி விவரக் கணக்குகளைக் காட்டினாலும், யதார்த்தத் தில் சாதாரண மக்களின் நிலைமை மிகவும் அவலமாக உள்ளது. நாட்டின் 40 சதவீத சொத்து வெறும் 1 சதவீத செல்வந்தர்களிடம் குவிந்துள்ள சூழலில், எஞ்சிய 50 சதவீத உழைக்கும் மக்கள் வெறும் 15 சதவீத வருமானத்தோடு போராடு கிறார்கள். 

மக்கள் போராடாத வரை எந்த அரசும் அவர்களைக் கவனிப்பதில்லை. போராட்டம் வெடிக்கும்போது மட்டுமே அரசுகள் அஞ்சிப் பேச்சுவார்த்தைக்கு வருகின்றன. மகாராஷ்டி ராவில் தொடங்கிய இந்த எழுச்சி நாடு முழுவதும் பரவ வேண்டும். நகர்ப்புறத் தொழிலாளர்களும், கிராமப்புற விவசாயிகளும், பழங்குடியினரும் எனப் பாட்டாளி வர்க்கத்தின் அனைத்துப் பிரி வினரும் ஒன்றிணைய வேண்டும்.

செருப்பில்லாத கால்களுடன் நடைபயணம் மேற்கொள்ளும் அவர்களின் உறுதி, குழந்தைக ளோடு பெண்கள் அணிவகுத்துச் செல்லும் வீரக்காட்சி, செங்கொடிகளை நெஞ்சில் ஏந்தி நிற்கும் அசாத்திய பெருமிதம் - இவையெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் அழிக்க முடியாத வலிமையை எடுத்துக்காட்டுகின்றன.

கார்ப்பரேட்-வகுப்புவாத அரசாங்கம் பொரு ளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் வர்க்கத்தின் தோள்களில் சுமத்துகிறது. இதை எதிர்ப்பதே வாழ்வாதாரத்திற்கான போராட்டம். அதற்கு பால்கரும் நாசிக்கும் வழிகாட்டுகின்றன.