பெண்ணை மிரட்டி பலாத்காரம் ஜனசேனா எம்எல்ஏ மீது புகார்
ஆந்திர மாநிலத்தில் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா வின் எம்.எல்.ஏ. ஆரவ ஸ்ரீதர் திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்கா ரம் செய்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளி யிட்ட பெண், எம்.எல்.ஏ. ஸ்ரீதரால் தான் பலாத்காரத்திற்கு ஆளாகி ஐந்து முறை கருக்கலைப்பு செய்ததாக குற்றம்சாட்டியதுடன் தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அம்மாநி லத்தில் போராட்டம் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அனிதா ராஜி னாமா செய்ய வேண்டும். தொடர்ந்து ஊருக்கு நியாயம் பேசும் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அவரது கட்சியில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு, கொலை குற்றவாளி களுக்கு ஆதரவாகச் செயல்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
