எப்படிச் சொல்றாங்க..?
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள பஞ்சேவா கிராமத்தில் காதல் திருமணத்திற்கு எதி ராக ஆணைகளைப் பிறப்பித்துள்ளனர். குடியரசு தினத் தையொட்டி இந்த சட்டவிரோத முடிவை எடுத்திருக்கி றார்கள். இதனால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகும். பால் உள்ளிட்ட அத்தியாவசி யத் தேவைகள் கிடைக்காது. ஆதரவு தெரிவிப்பவர்க ளுக்குத் தண்டனை. அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு அதிகரித்தது தான் இதற்குக் காரணம். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் எட்டு சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இரட்டை என்ஜின் அரசு என்று சொல்லப்படும் பாஜக ஆட்சியில் தங்களுக்குதான் ஆதரவு இருக்கும் என்ற தைரியத்தில் தான் சாதி வெறி சக்திகள் இதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிக்கின்றன என்கிறார்கள் காதல் திருமணங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்.
இவரா பேசுறார்..?
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பேச்சைக் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்து நிற்கிறார்கள் எதிர்க்கட்சியி னர். வாக்கு வங்கி அரசியலா, வளர்ச்சியா.. இதில் எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்கிறார் அவர். வளர்ச்சிப் பணிகளைச் செய்யாமல், மத வெறியைக் கிளப்பி விட்டு வாக்கு வங்கியை உருவாக்கும் வேலையைத்தான் இவ்வளவு நாட்களாக அவரும், பாஜகவும் செய்து வந்தது. வளர்ச்சிப் பணிகள் எங்கே என்று கேட்டுவிடக்கூடாது என்ப தற்காக இஸ்லாமிய வெறுப்பைக் கிளப்பி வந்தவர், திடீ ரென்று தேர்தல் வரப்போகிறது என்றவுடன் வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறாரே என்றுதான் ஆச்சரியப்படுகிறார்கள் எதிர்க் கட்சியினர். இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலும் வினோ தங்கள் இருக்கலாமோ என்றும் கிண்டலடிக்கிறார்கள்.
இவர் உளறுறாரே..! “
இவரெல்லாம் ஒரு ஆளா... இவருக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை” என்று மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உளறிக் கொட்டியுள்ளார். மாற்றுக்கட்சித் தலைவர்களைப் பற்றி அவர் இப்படிப் பேசவில்லை. பொருளா தார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவரு மான அமர்த்தியா சென்னைப் பற்றி யே சொல்லியிருக்கிறார். வாக்காளர் திருத்த நடவடிக்கையில் 92 வயதான அமர்த்தியா சென்னை அலைக் கழித்து வருகிறார்கள். வேண்டு மென்றே செய்கிறார்கள் என்று தெரிந்து, அந்த திருத்த நடவடிக்கைக்கு எதிராக அவர் குரல் எழுப்பினார்.அவருக்குத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மாறாக, திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய சுவேந்து அதிகாரி போன்ற வர்கள், கட்சித் தலைமையைத் திருப்திப்படுத்த அமர்த்தியா சென்னை அவமானப்படுத்த முயல்கிறார் கள். உளறல்கள் தொடர்கின்றன.
என்ன சொல்றாங்க..?
மாவோயிஸ்டுகளின் பலத்தை முறித்து விட்டோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத் தில் மாவோயிஸ்டுகளின் வலுவான ஆயுதப்பிரிவு இயங்கி வருகிறது. மக்கள் விடுதலை கொரில்லாப் படை என்ற பெயரில் இயங்கும் இந்த மாவோயிஸ்டுப் பிரிவில் நூற்றுக் கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்டுகள் உள்ள னர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 காவல்படையினர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பாவி மக்கள் 117 பேர் கொல் லப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் சொல் கின்றன. கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் சண்டை யில் 11 காவல்படையினர் காயமடைந்துள்ளனர். ஒருபுறம், மாவோயிஸ்டுகளின் அத்தியாயம் முடிந்துவிட்டதாக அமித் ஷா சொல்கிறார். மறுபுறத்தில், மாவோயிஸ்டுக ளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளனவே என்கிறார் கள் பீஜப்பூர் மக்கள்.
