ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்
வலதுசாரி பதிவர்கள் அனைவரும் யுஜிசி விதிகளை எதிர்த்து பாஜகவின் தர்மேந்திர பிரதானையும் நிஷிகாந்த் துபேவையும் வசைபாடி கொண்டிருக்கின்றனர். பிரதமருக்கு தெரியாமல் அமைச்சர்கள் கொள்கை முடிவு எடுக்க முடியுமா? முடியாதென பதிவர்களுக்கு தெரியும். ஆனால் யுஜிசி விதிகள் குறித்து திட்டவும் வேண்டும். அதே சமயம் பிரதமரை காப்பாற்றவும் வேண்டும். அதற்குத்தான் இந்த உத்தி.
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
தற்போது ரூபாயை பாதிப்பது மூலதன வெளியேற்றங்கள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு புரிதலுக்கு வரும் வரை இந்த வெளியேற்றங்கள் தொடரும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
ஹிமந்தா பிஸ்வா சர்மா மீண்டும் ஒருமுறை அசாம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். நிலத் தரகரான ஹிமந்தா, ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்களை பெருநிறுவனங்களின் லாபத்திற்காக விற்றுள்ளார். இது அசாம் மாநிலத்தை ஏழ்மையாக்கிவிட்டது.
எழுத்தாளர் சஞ்சய் ஜா
சிறுபான்மையினருக்கு எதிராக அசாம் முதலமைச்சரின் பேச்சுகள் எந்தவொரு நாகரிகமான தனிநபருக்கும் கவலையளிக்கும். ஆனால் அது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காக்கும் மௌனம் அதிர்ச்சியளிக்கிறது.
