headlines

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குடியரசு தின விருதுகள் வழங்கல்

சென்னை: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின  விழாவில், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை  நீலகிரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் மறைந்த பீட்டர் ஜான்சன் குடும்பத்தினருக்கு முதல்வர் வழங்கினார். மத  நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது கலி முல்லாவிற்கும், நெல் உற்பத்தித் திறனுக்கான விருது வீர மணிக்கும் வழங்கப்பட்டது.

‘பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்’

சென்னை: மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின வாழ்த்துச்  செய்தியில், “பன்முக இந்தியாவைக் கொண்டாட வேண்டும்”  என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சிறந்த காவல் நிலையத்திற்கான விருது மதுரை மாநகர காவல்  நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

15 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணி களின் கீழ் பெயர் சேர்க்க இதுவரை 15,65,454 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கத்திற்காக 87,579 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பெயர் சேர்க்கும் அவகாசத்தை ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டித்துத் தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு

சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளி கையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. தமிழக அமைச்சர்களும் இதில் பங்கேற்கவில்லை. எனினும்,  அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மற்றும் அரசுத் தலைமைச் செயலாளர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பட்டா மாறுதல்: இனி ‘டிஜிட்டல்’ மட்டுமே!

சென்னை: தமிழகத்தில் பட்டா மாறுதல் நடைமுறை களில் கையால் எழுதப்படும் மேனுவல் கோப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘கொலாப்லேண்ட்’, ‘தமிழ் நிலம்’ மென்பொருட்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோப்புகள் தேக்க மடைவது குறைந்து வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.