tamilnadu

img

கடலை மிட்டாய் மொத்த விலை 40% உயர்வு!

நிலக்கடலை விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கடலை மிட்டாயின் மொத்த விலையை 40 சதவீதம் உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, இதுவரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ.8,000க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.14,500 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக உற்பத்திச்செலவு அதிகரித்துள்ளதாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, இதுவரை ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.180க்கு மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி அது ஒரு கிலோ ரூ.220க்கு மொத்த விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை உற்பத்தி குறைவு, போக்குவரத்து செலவு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளதாகவும், விலை உயர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.